15 வயதில் ஹீரோயின்... முன்னணி தமிழ் ஹீரோவை காதலித்து 2 மாதத்தில் கழட்டி விட்ட... விஜய் பட ஹீரோயினா இது?

First Published May 23, 2024, 7:36 PM IST

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும், பிரபலத்தை காதலித்து 2 மாதத்தில் கழட்டி விட்ட பிரபல நடிகை ஹன்சிகாவின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பாலாடை கட்டி நிறத்தில்... பளீச் அழகில் ஜொலிப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.  சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஹன்சிகா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். இவரது தாயார் மோனா மோட்வானி ஒரு தோல் மருத்துவராவார். மும்பையில் படித்துக்கொண்டிருக்கும் போதே... சின்னத்திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து.

Hansika Motwani

அந்த வகையில், 90'ஸ் கிட்சிங் ஃபேவரட் மாயாஜால தொடரான ஷக லக பூம் பூம் என்ற தொடரில் நடித்தார்.  பின்னர் Hawa என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த, Koi... Mil Gaya, உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

19 வருட திருமண வாழ்க்கையில்... ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் இல்லை! கணவர் பற்றி தனுஷின் சகோதரி போட்ட பதிவு!
 

2007 ஆம் ஆண்டில் 15 வயதிலேயே, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் 'தேசமுதுருது' என்கிற படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றார்.  பின்னர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.
 

தமிழ் பட இயக்குனர்கள் கண்ணும் ஹன்சிகா மீது படவே, இயக்குனர் சுராஜ் நடிகர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கிய 'மாப்பிள்ளை' படத்தின் மூலம்  என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து பிரபு தேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்திலும் ஹன்சிகா தன்னுடைய துரு துரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு.. புகைப்படத்துடன் அறிவித்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! குவியும் வாழ்த்து!
 

ஹன்சிகாவின் கொழுக்கு மொழுக்கு அழகு, நடிகை குஷ்புவை போலவே ஒரு ஜாடையில் இருந்ததால், தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழையப்பட்டார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகா, 2015-ஆம் ஆண்டு சிம்புவுடன் சேர்ந்து 'வாலு' படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க துவங்கினர் .
 

இரண்டு மாதமே இந்த காதல் உறவு கலை கட்டிய நிலையில்... திருமண பேச்சு வார்த்தை வரை சென்று சிம்பு - ஹன்சிகா உறவு பிரேக்அப்பில் முடிந்தது. தற்போது இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இதுவரை தங்களின் காதல் முறிவுக்கு என்ன காரணம் என்பதை கூறவில்லை. 

நடிப்புக்காக காதலனை கழட்டி விட்டுட்டு... பிரபல நடிகருடன் வெளிநாடுகளில் டேட்டிங் செய்யும் 28 வயது நடிகையா இவர்?
 

உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக சில விமர்சனங்களுக்கு ஆளான ஹன்சிகா அதிரடியாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்தார். தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகாவின், குழந்தை பருவ கியூட் புகைப்படம் வெளியாகி பல ரசிகர்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Ajith Salary: 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க அஜித் பெரும் சம்பளம் இத்தனை கோடியா? கேட்டாலே பக்குனு ஆகுதே!

Latest Videos

click me!