IND vs AUS T20 WC:அர்ஷ்தீப் சிங், குல்தீப் சிங்கை வைத்து ஆஸ்திரேலியாவை காலி செய்த ரோகித் சர்மா: இந்தியா வெற்றி

By Rsiva kumar  |  First Published Jun 25, 2024, 4:36 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். டேவிட் வார்னர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் அக்‌ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களில் குல்தீப் பந்தில் அவுட்டானார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்களில் நடையை கட்ட, அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த டிம் டேவிட் 15 ரன்னிலும், மேத்யூ வேட் 1 ரன்னிலும் வெளியேறவே கடைசியில் வந்த பேட் கம்மின்ஸ் 11 மற்றும் மிட்செல் ஸ்டார்க் 4 ரன்களுடன் ஆட்டமிழக்க இருந்தனர். எனினும், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tap to resize

Latest Videos

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி வரும் 27 ஆம் தேதி கயானாவில் நடைபெறும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!