நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...

First Published Jun 29, 2022, 5:22 PM IST

T Rajendar Latest photos: நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து லண்டனில் இருந்து புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Director T. Rajendar

தமிழ் நடிகர் டி.ராஜேந்தர்  நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர். 1980 களில் அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர்களாகி உள்ளார். இந்த படங்கள் பல ஆண்டுகாள வெற்றிப்படங்களாக உள்ளன. அதோடு டீ.ராஜேந்தர் தனது திரைப்படங்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, இவர் தனது படங்களில் மகன் சிலம்பரசனை குழந்தை முதலே அறிமுகப்படுத்தினார். தற்போது சிம்பு கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க....Pandian Stores Meena: ஐயோ..பாவம் ....பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? பதறிப்போன குடும்பம்

T Rajendar

அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இதைத்தொடர்ந்து முதல் கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்ட டி.ராஜேந்தர், கடந்த 14-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதனால் டி ராஜேந்தரின் ரசிகர்களும் சிம்பு ரசிகர்களும் கவலை கொண்டனர்.

மேலும் படிக்க....Pandian Stores Meena: ஐயோ..பாவம் ....பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? பதறிப்போன குடும்பம்

T Rajendar

இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சிலம்பரசன் முன்கூட்டியே அமெரிக்க சென்று கவனித்து வந்தார். இதையடுத்து டி ராஜேந்தர், மனைவி உஷா, இளைய மகன் குறளரசன் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜேந்தர், நான் நலமுடன் திரும்பி வருவேன் என்று உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீருடன் வெளியேறினார்.

T. Rajendar

இந்த நிலையில், அமெரிக்கா மருத்துவமனையில் டி.ராஜேந்தருக்கு ரத்தக்கசிவு இருந்த பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பாக அவருடன் உஷா, டி ராஜேந்தர், சிம்பு ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. மேலும், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அங்கு இன்னும் சில நாட்கள் தங்க வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க....Pandian Stores Meena: ஐயோ..பாவம் ....பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? பதறிப்போன குடும்பம்

click me!