கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள புன்னச்சேரியில் நேற்று இரவு காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள புன்னச்சேரியில் நேற்று இரவு காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்... இந்த 3 நாட்களுக்கு வெப்ப அலை உக்கிரமாக இருக்குமாம்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!
இந்த கோர விபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முதலில் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட முடியாது: அஜித் பவார்!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த கே.என்.பத்மகுமார் (59), சூரிக்காட் சுதாகரன்(52), சுதாகரன் மனைவி அஜிதா(35), அவரது தந்தை கொழுமாள் கிருஷ்ணன்(65), 9 வயது சிறுவன் ஆகாஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.