Kanguva Updates: சூடுபிடித்த 'கங்குவா' படத்தின் அடுத்த கட்ட பணிகள்! தீவிரம் காட்டும் சூர்யா! வைரலாகும் போட்டோஸ

First Published Feb 21, 2024, 2:57 PM IST

'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் சூர்யா, இப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தமிழில் தொடர்ந்து தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேடிப்பிடித்து நடித்து வருபவர் சூர்யா. குறிப்பாக 'ஜெய்பீம்' படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் அழுத்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது.
 

மேலும் விக்ரம், ராக்கெட்டரி போன்ற படங்களில் கேமியோ ரோலில் சூர்யா நடித்திருந்தாலும், ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரமாக அமைந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'வணங்கான்' படத்தில் இணைந்த சூர்யா, பாதியிலேயே அப்படத்தில் இருந்து விலகினார்.

நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப வலிக்குது! த்ரிஷாவுக்கு ஆதரவாக சீரிய கஸ்தூரி!

Actor Suriya

இந்தப் படத்தை தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடிக்க துவங்கினார். ஹிஸ்டாரிகள் கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஒரு நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
 

இதைத்தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது  தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யா இப்படத்தின் டப்பிங் பணியை துவங்கி உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரப்பி வருகிறது.

Yashika Photos: சேலையை கட்டாமல்.. கழட்டி போட்டு சைடு போஸில் கிளாமர் காட்டும் யாஷிகா! சூடேற்றும் ஹாட் கிளிக்ஸ்!

இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜ் சுப்பிரமணியம், ஜெகபதிபாபு, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், மாரிமுத்து, தீபா வெங்கட், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!