மூன்று குழந்தைகளின் தாய் செய்யுற வேலையா இது.. காவல் நிலையத்தில் கதறும் காதல் கணவர்!

By vinoth kumar  |  First Published May 12, 2024, 1:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் விபின். இவருடைய மனைவி நிஷா. இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


காதல் திருமணம் செய்த 3 குழந்தைகளின் தாய் ரூ.18 லட்சம் பணம், 15 சவரன் நகைகளுடன் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் விபின். இவருடைய மனைவி நிஷா. இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் விபின் கடன் சுமையால் கடும் நெருக்கடியில் இருந்து வந்தார். இதனால் வேறு வழியில்லாமல் தனது வீட்டை விற்ற ரூ.18 லட்சத்தை மனைவி நிஷாவிடம் கொடுத்துவிட்டு விபின் சென்னையில் வேலைக்கு சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்! வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்! நடத்தது என்ன?

இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிய நிஷா பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விபினுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சொந்த ஊருக்கு திரும்பியதும் கடனை அடைப்பதற்காக கொடுத்து வைத்த ரூ.18 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகையுடன் நிஷா மாயமானது தெரியவந்தது.

இதையும் படிங்க:  தூத்துக்குடியில் பயங்கரம்.. சினிமா பாணியில் வழக்கறிஞர் ஓட ஒட விரட்டி படுகொலை.. இதுதான் காரணமா?

இதையடுத்து விபின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல்  விவகாரத்தில் கணவர் மற்றும் 3 குழந்தைகளை தவிக்கவிட்டு நிஷா வேறு யாருடனாவது சென்றுவிட்டாரா அல்லது வேறு   ஏதேதனும் காரணமாக என விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!