Latest Videos

Arjun : ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு டும் டும் டும்.. நாளை நடக்கும் திருமணம் - அதற்கு முன் மாமனார் போட்ட கண்டிஷன்!

First Published Jun 10, 2024, 10:53 PM IST

Aishwarya Arjun : நாளை பிரபல நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

Arjun

Action King Arjun : தமிழ் திரையுலகில் மிக மூத்த நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் அர்ஜுன். இவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு, மூத்த நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கு நாளை திருமணம் (ஜூன் 11ம் தேதி) நடக்கவுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சித்தி ராதிகாவுடன் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி! வைரல் போட்டோஸ்!

Umapathy

Aishwarya Arjun : என்னதான் அப்பா மிகப்பெரிய நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தாலும் கூட நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பெரிய அளவில் திரைத்துறை பக்கம் பயணிக்கவில்லை என்றே கூறலாம். இதுவரை கன்னடம் மொழியில் 1 படமும், தமிழில் 2 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். அப்பா மற்றும் அம்மா பேச்சை தட்டாத ஒரு செல்ல பிள்ளை அவர்.

Aishwarya Arjun

Umapathy Ramaiah : இந்நிலையில் நாளை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், நடிகரும் ஐஸ்வர்யாவின் மாமனாருமான தம்பி ராமையா ஒரு அதிரடி கண்டிஷனை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Umapathy and Aishwarya

Thambi Ramaiah : என்னதான் திரைத்துறையில் தனது சம்மந்தியும் (அர்ஜுன்) தானும் மிகப்பெரிய உயரத்தில் பயணித்து வந்தாலும் திருமணத்திற்கு பிறகு தனது மருமகள் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்கின்ற கண்டிஷன் தான் அதுவாம். இதற்கு ஐஸ்வர்யா அர்ஜுனின் குடும்ப உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

"அவர் இன்றி என் பயணம் சாத்தியமில்லை".. தன் வாழ்க்கையை செதுக்கிய ஆசான் - கியூட் கிளிக் வெளியிட்ட ராதிகா!

click me!