நீண்ட நாட்களுக்கு பிறகு வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடிய தோனி அண்ட் ஜிவா!

By Rsiva kumar  |  First Published Jun 17, 2024, 8:17 AM IST

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகள் ஜிவா உடன் இணைந்து தோனி வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.


ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான கிட்டத்தட்ட 50 நாட்கள் ரொம்பவே பிஸ்யாகவே இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு பிறகு மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா உடன் பாரிஸ், ஐரோப்பா என்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.

 

Dhoni & Ziva enjoying the time with their pet.

- Cutest frame of the day. 💛 pic.twitter.com/KE6bJtDPNx

— Johns. (@CricCrazyJohns)

Tap to resize

Latest Videos

undefined

 

இந்த நிலையில் தான் தற்போது ராஞ்சி திரும்பிய தோனி தனது வளர்ப்பு நாயுடன் நேரம் செலவிட்டு வருகிறார். தோனி மட்டுமின்றி அவரது மகள் ஜிவாவும் வளர்ப்பு நாயுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஏலத்தில் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு அணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

MS Dhoni enjoying the time at his farm-house. 👌 pic.twitter.com/muQ5HxbjHD

— Johns. (@CricCrazyJohns)

 

நடந்து முடிந்த 17ஆவது சீசன் உடன் தோனி ஓய்வு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைப்பற்றி தோனி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிஎஸ்கே அதிகாரிகள் கூறியிருந்தனர். இதன் காரணமாக வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Dhoni & Ziva enjoying the time with their pet.

- Cutest frame of the day. 💛 pic.twitter.com/KE6bJtDPNx

— Johns. (@CricCrazyJohns)

 

click me!