இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்த்த மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் கலே மாரடைப்பு காரணமாக சற்றுமுன் உயிரிழந்தார்.
மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த அமோல் கலே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் திடீரென்று உயிரிழந்துள்ளார். நேற்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினார். இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.
அண்மையில் நடந்து முடிந்த 2023 – 24 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசனில் மும்பை டிராபியை கைப்பற்றியதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அமோல் கலேயின் பங்கு முக்கியத்துவம் பெருகிறது. அமோல் கலே ஸ்டிரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டியிலும் இருந்தார். அவர், மும்பை டி20 லீக் தொடரை புதுப்பிக்க திட்டமிட்டிருந்தார். சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊதியம் வழங்குவதைப் போன்று மும்பை வீரர்களும் போட்டி கட்டணத்தை பெறுவார்கள் என்ற முடிவை மும்பை கிரிக்கெட் சங்கம் எடுத்த போது அமோல் கலே பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்த்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது சங்கய் நாயக் துணை தலைவராக இருக்கும் நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இடைக்கால பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்ட டாஸ் காயினை காணாமல் தேடிய ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ!