- Home
- Gallery
- ஐபிஎல் வச்சு தப்பு கணக்கு போட்ட செலக்ஷன் கமிட்டி; இதுக்கு ஷிவம் துபேவை எடுக்காமலேயே இருந்திருக்கலாம்!
ஐபிஎல் வச்சு தப்பு கணக்கு போட்ட செலக்ஷன் கமிட்டி; இதுக்கு ஷிவம் துபேவை எடுக்காமலேயே இருந்திருக்கலாம்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆறுச்சாமி என்று சொல்லப்படும் ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்ததோடு, முக்கியமான கேட்ச் ஒன்றையும் கோட்டைவிட்டுள்ளார்.

IND vs PAK, T20 World Cup 2024
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று அதிரடியாக விளையாடியவர் ஷிவம் துபே. இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 396 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 66* ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் விதத்தைக் கண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.
IND vs PAK, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து முக்கியமான போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நேற்று நியூயார்க்கில் நடைபெற்றது.
IND vs PAK, T20 World Cup 2024
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி 4 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Shivam Dube
அக்ஷர் படேல் 20, சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ஆறுச்சாமி என்று சொல்லப்படும் ஷிவம் துபே களமிறங்கினார். அவர் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
IND vs PAK, T20 World Cup 2024
கடந்த மே மாதம் முதல் இதுவரையில் ஷிவம் துபே விளையாடிய டி20 போட்டிகளில் முறையே 0, 0, 21, 18, 7, 14, 0*, 3 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
IND vs PAK, T20 World Cup 2024
இதே போன்று முக்கியமான போட்டிகளில் ஷிவம் துபே விளையாடி வரும் நிலையில் இனி வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் முக்கியமான தருணத்தில் கையில் வந்து விழுந்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார்.