Prithviraj : மலையாள திரையுலகின் 'நடிப்பு அசுரன்' பிருத்விராஜ் சுகுமாரன் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

First Published Mar 28, 2024, 10:08 AM IST

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் குறித்து பார்க்கலாம்.

Prithviraj sukumaran

மலையாள திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாரன். இவரது தந்தை சுகுமாரனும் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார். தந்தையின் தயவால் சினிமாவுக்குள் ஈஸியாக நுழைந்த பிருத்விராஜ், அதன் பின் இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு தான். இதை அவரே பல பேட்டிகளிலும் கூறி இருக்கிறார்.

நடிகர் பிருத்விராஜ் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த மொழி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதேபோல் தெலுங்கில் பிரபாஸுடன் இவர் நடித்த சலார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் சில மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிருத்விராஜ்.

அதன்படி மலையாளத்தில் மோகன் லால் நடித்த லூசிபர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிருத்விராஜ். முதல்படத்திலேயே இயக்குனராக பிரம்மாண்ட வெற்றியை ருசித்த அவர், அடுத்ததாக ப்ரோ டேடி என்கிற படத்தை இயக்கினார். இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது எம்பூரான் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் பிருத்விராஜ். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாகும்.

நடிகர் பிருத்விராஜ் தன் மனைவி சுப்ரியா உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். அவரது தயாரிப்பில் வெளிவந்த டிரைவிங் லைசன்ஸ், கடுவா ஆகிய படங்கள் அமோக வரவேற்பை பெற்றன. இதுதவிர பாடகராகவும் பல்வேறு படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் டப்பிங் கலைஞராகவும் ஒரு சில மலையாள படங்களில் பணியாற்றி இருக்கிறார் பிருத்விராஜ்.

இதையும் படியுங்கள்... GOAT movie : தளபதி விஜய்யின் கோட் படத்தில் ‘தல’யும் நடிக்கிறாரா? வெங்கட் பிரபுவின் மாஸ் சம்பவம் லோடிங்

Aadujeevitham Prithviraj

இப்படி பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் இவர் தற்போது ஆடுஜீவிதம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சுமார் 16 ஆண்டு உழைப்புக்கு பின்னர் இப்படம் திரை வடிவம் கண்டுள்ளது. பிளெஸி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார் பிருத்விராஜ். இப்படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Prithviraj net worth

இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நிலவரப்படி இவருக்கு ரூ.54 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். 

Prithviraj Salary

கேரள மாநிலம் கொச்சியில் சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்றை கட்டி வசித்து வரும் பிருத்விராஜ், அண்மையில் மும்பையில் ரூ.17 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகர் பிருத்விராஜுக்கு கார்கள் மீதும் அலாதி பிரியம் உண்டாம். அதனால் லம்போகினி உருஸ், ரேஞ்ச் ரோவர் வோக், லேண்ட் ரோவர் டிபெண்டர், போர்ச், மெர்சிடிஸ் AMG G63 போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Vijay : புஸ்ஸி ஆனந்த் சகவாசம் விஜய்க்கு நல்லதல்ல... என் மகனோட எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு - SAC குமுறல்

click me!