Rashmika: 'புஷ்பா' பட புரோமோஷனில் தாராள கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா! விட்டா கில்மா நடிகைகளை மிஞ்சிடுவாங்க போல!

First Published Dec 16, 2021, 4:04 PM IST

'புஷ்பா' திரைப்படம் வரும் 17 ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று கேரளாவில் நடந்த போது... அதில் ராஷ்மிகா (Rashmika)  மிகவும் மோசமாக கவர்ச்சி உடைஅணிந்து கலந்து கொண்ட புகைப்படங்கள் இதோ...

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  

 இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் இந்த மாதம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.

இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்னாள் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, 24 மணிநேரத்தில் சுமார் 14 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மாஸ் காட்டியது.

அந்த வகையில் தற்போது படம் ரிலீஸ் நெருங்கி வருவதால்... படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில்... நேற்று நடந்த கேரளாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கஊதா நிற லெஹங்கா அணிந்து  வந்திருந்த ராஷ்மிகா... ஓவர் கவர்ச்சி அலப்பறை செய்த புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் வகையில், கேரளத்து பெண் குட்டி போல் சந்தனமும் வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!