திருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

First Published Jan 15, 2021, 8:30 PM IST

திருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!
 

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனை குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களையும் வேண்டாத கொள்கைகளையும், தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
undefined
இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தை பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்று ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள், என அனைவரும் எந்த வித பாகுபாடும் இன்றி வீடு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புதரிசியிட்டு அதனை சுற்றி மஞ்சள் கொத்து கட்டி, கருப்பு வைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் 'பொங்கலோ பொங்கல்' என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.
undefined
மூன்றாம் நாள்: விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளை ஆறு, ஏறி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்த பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ண பொட்டுகள் வைத்தும், கழுத்தில் வண்ண மணிகள், புதிய கயறு, ஜரிகைத்துணி, வேஷ்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல் நாள் போன்றே பொங்கல் வைத்து மாடுகளின் முன்பு படையல் வைத்து ஊட்டி விட்டு மகிழ்வார்கள்.
undefined
அதன் பின்பு கிரப்பபுரங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்து சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழட்டு விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள்.இது தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டாக நடத்தப்படுகிறது.
undefined
நான்காம் நாள்: காணும் பொங்கல், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோம்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னி பொங்கல் எனப்படுகிறது. உற்றார்,உறவினர், மட்டுமின்றி ஜாதி, மத, பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவாய் ஒருவர் கண்டு கழிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமுகத்தின் ஒன்று படும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!