பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழக ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமானார். அதன் பின்னர் பரதேசி, ஒருநாள் கூத்து, கபாலி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.