இது தாறு மாறான கார்... பிக்பாஸில் இருந்து வந்த Bulk தொகை; புது கார் வாங்கிய கையோடு மணி வெளியிட்ட மாஸ் வீடியோ

By Ganesh A  |  First Published Apr 24, 2024, 4:06 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன மணிச்சந்திரா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. பல்வேறு சண்டைகளும், சர்ச்சைகளும் நிறைந்திருந்த இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு காரும் வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடம் மணிக்கும், மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்தது. இந்த சீசனில் சண்டையை போல் காதலுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் உள்ளே எண்ட்ரி கொடுக்கும் போதே காதல் புறாக்களாக வந்தவர்கள் தான் மணி மற்றும் ரவீனா. இவர்கள் இருவரும் தாங்கள் நண்பர்கள் தான் என்று சொல்லி வந்தாலும் ஒரு கட்டத்தில் காதலிப்பதை வெளிப்படையாகவே கூறினர். பின்னர் பேமிலி ரவுண்டில் ரவீனாவின் உறவினர் வந்து மணிக்கு செம்ம டோஸ் கொடுத்தது யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... டீச்சர் வேலை பறிபோனா என்ன.. பரணியால் ரத்னாவுக்கு அடிக்கும் ஜாக்பாட் - அண்ணா சீரியலில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

அதுமட்டுமின்றி மணி ரவீனா இருவரும் ஜோடியாகவே கேம் ஆடி வந்த நிலையில், கடைசி கட்டத்தில் ஒருவர் தான் பைனலுக்குள் செல்ல முடியும் என்கிற சூழல் வந்தபோது ரவீனா எலிமினேட் ஆனார். இதையடுத்து பைனலுக்குள் நுழைந்த மணி, இறுதிவரை சென்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால் அவருக்கு இரண்டாம் இடம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும் மாயா போன்ற ஸ்ட்ராங் ஆன போட்டியாளர்களை தாண்டி மணி இரண்டாம் இடம் பிடித்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

இந்த நிலையில், பிக்பாஸ் முடித்த கையோடு, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் மணி. மஹிந்திரா நிறுவனத்தின் மாஸான கார்களில் ஒன்றான தார் காரை வாங்கி இருக்கிறார். அந்த காரை டெலிவெரி எடுத்த கையோடு, கரடு முரடான மலைப் பாதையில் அதை ஓட்டிச் சென்று புழுதி பறக்க ஒரு அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் மணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சந்தியா ராகம் சீரியல் : போட்டியில் வென்ற தனம்.. சர்பரைஸ் கொடுக்க முடிவெடுத்த ப்ரின்ஸிபல்; அதிர்ச்சியில் ஜானகி

click me!