சொன்னதை செய்த விஷ்ணு விஜய்... பிக்பாஸில் மாயா தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ வைரல்

By Ganesh A  |  First Published Jan 18, 2024, 1:51 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மட்டும் தோல்வி அடைந்தால் பட்டாசு வெடிப்பேன் என சொன்னதை போல் செய்து காட்டி இருக்கிறார் விஷ்ணு விஜய்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மாயா, விஷ்ணு, மணி, அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய ஐந்து பேர் பைனலுக்கு முன்னேறி இருந்தனர். இதில் விஷ்ணு விஜய்க்கு ஐந்தாவது இடமும், தினேஷுக்கு நான்காம் இடமும் கிடைத்தது. அடுத்ததாக டாப் 2-வில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மாயாவுக்கு மூன்றாம் இடம் மட்டுமே கிடைத்தது. இறுதியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மணியை வீழ்த்தி டைட்டிலை தட்டிச்சென்றார் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதுதவிர ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெளியே வந்த போட்டியாளர்கள் ஏ டீம், பீ டீம் என பிரிந்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

Latest Videos

இதையும் படியுங்கள்... சினிமா ஹீரோயினை உருகி உருகி காதலிக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ... விரைவில் டும்டும்டும்

குறிப்பாக ஏ டீமில் உள்ள மாயா, அர்ச்சனா டைட்டில் ஜெயித்ததை விமர்சித்து பேசி இருந்தார். டைட்டில் ஜெயித்த பின்னர் அர்ச்சனா இன்னும் சோசியல் மீடியா பக்கமே தலை காட்டாமல் உள்ளார். மறுபுறம் பீ டீமில் உள்ள விஷ்ணு, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே, மாயா மட்டும் இந்த நிகழ்ச்சியில் தோற்றால் தான் வெளியே சென்றது, ஆயிரம் வாலா சரவெடி வெடித்து கொண்டாடுவேன் என கூறி இருந்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே மாயா தோல்வி அடைந்ததால், ஆயிரம் வாலா பட்டாசை சாலை வைத்து கொளுத்து மாயாவின் தோல்வியை கொண்டாடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தரமான சம்பவம் என விஷ்ணுவுக்கு பயர் விட்டு வருகின்றனர்.

Podraaa Vediyeaa..
🧨🧨🧨🧨🧨🔥🔥🔥🔥

Sonnadhai seidhu kaatiya 😎👏🏻

pic.twitter.com/JRnXjCkqOg

— Tharani ᖇᵗк (@iam_Tharani)

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா செய்த தில்லுமுல்லு வேலை... அபிராமியிடம் வசமாக சிக்கிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் டுவிஸ்ட்

click me!