பிக்பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டி உடன் வெளியேறிய பூர்ணிமா தற்போது மீண்டும் கெஸ்டாக ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது பினாலே வாரம் என்பதால் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வரை அக்ஷயா, அனன்ய, வினுஷா, பிராவோ, கூல் சுரேஷ், சரவண விக்ரம் ஆகிய ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மேலும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். முதலில் ஜோவிகா செல்ல, அடுத்ததாக கானா பாலா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதையடுத்து மூன்றாவது போட்டியாளராக பீனிக்ஸ் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரின் எண்ட்ரியை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர்.
இதையும் படியுங்கள்... 'மிஷன் சாப்டர் 1' படத்தில் இந்த விஷயம்.. என் முந்தைய படங்களை விட சிறப்பாக இருக்கும்! அருண் விஜய் ஓபன் டாக்!
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறலெவலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். முகத்தை மூடிக்கொண்டு பப்பூன் வேடம் அணிந்திருந்த பூர்ணிமா, உள்ளே டான்ஸ் ஆடியபடி வந்தார். அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தரையில் உருண்டு பிறண்டு வேறலெவலில் டான்ஸ் ஆடிய அவர். பின்னர் சுமால் பாஸ் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த விஷ்ணு உடன் குத்தாட்டம் ஆடினார்.
இதையடுத்து ஆடிக்கொண்டே மாயாவிடம் சென்ற பூர்ணிமா அவரிடம் ஒரு பரிசை கொடுத்துவிட்டு தன் முகமுடியை கழட்டினார். முகமுடியை கழட்டும் வரை அது பூர்ணிமா என்று யாராலும் கணிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு பெர்பார்மன்ஸில் அடிதூள் கிளப்பிவிட்டார் பூர்ணிமா. பின்னர் முகமுடியை கழட்டியதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன மாயா, அவரை கட்டிப்பிடித்து வரவேற்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Entry 🤡😛🔥
Nalla Performances ma 😜
See Reaction 😂
pic.twitter.com/VnbJBfOD83
இதையும் படியுங்கள்... 43 வயதிலும் கவர்ச்சியை வைத்து கல்லாகட்டும் கிரண்... முரட்டு சிங்கிள் நடிகைக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா