உடனே வீட்டை விட்டு வெளிய போங்க... விதிமீறிய ரவீனாவின் உறவினர்கள்... வந்த வேகத்தில் வெளியே அனுப்பிய பிக்பாஸ்

விதிகளை மீறியதால் ஃபிரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரவீனாவின் குடும்பத்தார் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான டாஸ்க்குகளில் ஒன்று ஃபிரீஸ் டாஸ்க். இது நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் நடத்தப்படும். இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். அவர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க அன்பை பரிமாறிக்கொள்ளும் அழகிய நிகழ்வுகள் நிறைந்த டாஸ்க் ஆக இந்த ஃபிரீஸ் டாஸ்க் அமைந்திருக்கும்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதால் இந்த வாரம் முழுக்க ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரு தினங்களாக பூர்ணிமா, விஷ்ணு, சரவண விக்ரம், தினேஷ், நிக்சன், மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று எஞ்சியுள்ள மாயா, ரவீனா, விசித்ரா ஆகியோரின் குடும்பத்தார் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில் ரவீனாவின் குடும்பத்தில் இருந்து அவரது உறவினர்கள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் வந்த உடன் ரவீனா - மணி இடையேயான காதல் விவகாரத்தை பற்றி பேசியதோடு, ரவீனாவுக்கு வார்னிங்கும் கொடுத்தனர். இதுகுறித்த காட்சிகள் முதல் புரோமோவில் இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் ரவீனாவின் குடும்பத்தார் விதிகளை மீறியதாக கூறி அவர்களை பாதியிலேயே வெளியேற்றி உள்ளார் பிக்பாஸ்.

ரவீனாவுடன் பேசும் போது அவரது உறவினர்கள் code wordகள் சொல்லி பேசியுள்ளனர். குறிப்பாக ரெட் என அவர் சொல்லி பேசி இருக்கிறார்கள். பிரதீப்பின் ரெட் கார்டு விஷயத்தை சொல்லி அவர் இப்படி பேசியதை கவனித்த பிக்பாஸ் உடனடியாக குறுக்கிட்டு அவர்கள் விதிமீறியதை சுட்டிக்காட்டி, உடனே இந்த வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறி இருக்கிறார். வந்த வேகத்தில் உறவினர்களை கிளம்ப சொன்னதால் ரவீனா கதறி அழும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. பிக்பாஸ் வரலாற்றில் உறவினர்களை பாதியில் வெளியேற்றியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Dec 21, 2023

CODE RED 💥💥 family sent out for violating rules | | | | | pic.twitter.com/jalTtJOKrI

— FlickVillage (@flickvillage)

இதையும் படியுங்கள்... தயவு செஞ்சு பேசாதீங்க... அறைஞ்சிருவேன்! காதலுக்கு எதிர்ப்பு... ரவீனா பேமிலியிடம் செம்ம திட்டு வாங்கிய மணி

click me!