வந்தாச்சு Freeze Task... இந்த வாரம் முழுக்க கண்ணீர் கடலில் மூழ்கப்போகும் பிக்பாஸ் வீடு! எமோஷனல் புரோமோ இதோ

Published : Dec 19, 2023, 10:55 AM IST
வந்தாச்சு Freeze Task... இந்த வாரம் முழுக்க கண்ணீர் கடலில் மூழ்கப்போகும் பிக்பாஸ் வீடு! எமோஷனல் புரோமோ இதோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் முழுக்க Freeze Task நடைபெறும் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் செம்ம குஷியாகி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பைனலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சி உள்ளதால், போட்டியாளர்களுக்கு இடையே போட்டி கடுமையாகி உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்ததில் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் வெறும் 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். அப்படி ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் டாஸ்க் என்றால் அது Freeze Task தான். இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரை பார்க்கும் போது போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க அவர்களை ஆரத்தழுவி வரவேற்பது காண்போரை கண்கலங்க செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த எமோஷனல் டாஸ்க் தான் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக Freeze Task நடைபெற்று உள்ளது.

அதன்படி ஒரே நேரத்தில் 4 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். முதலாவதாக பூர்ணிமாவின் பெற்றோர் செல்ல, அடுத்து விஜய் வர்மா, அர்ச்சனா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரின் பெற்றோரும் வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் புகைப்படமும் எடுத்துகொண்ட அழகிய புரோமோ வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் பட்டத்துல என்ன பெருமை இருக்கு... அது waste of time - மறைமுகமாக தலைவரை தாக்கிய தங்கலான் நாயகி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?