நிக்சனுக்கு எதிராக உரிமைக்குரல் தூக்கிய அர்ச்சனா... ரெட் கார்டு கொடுக்காமல் கமல் செய்த தக் லைஃப் சம்பவம்

By Ganesh A  |  First Published Dec 9, 2023, 4:00 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் தரக்குறைவாக பேசியதை கண்டித்ததோடு அவரை தன் பாணியில் வறுத்தெடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது மாயா, பூர்ணிமா, நிக்சன், அனன்யா, விஜய் வர்மா, அர்ச்சனா, விஷ்ணு, விசித்ரா, தினேஷ், மணி, கூல் சுரேஷ், சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இந்த சீசனில் டைட்டிலை தட்டிதூக்க போகிறார்கள். இதனால் தற்போதில் இருந்தே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். ஆனால் இந்த வாரம் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏராளமானோர் வாக்களிக்க முடியாமல் போனதால் இன்று எலிமினேஷன் கிடையாது என பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த தகவலை சொல்லாமல் சீக்ரெட் ஆகவே வைத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், இந்த வார நாமினேஷனில் சிக்கியிருந்த நிக்சன், அர்ச்சனாவிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சண்டை போட்டார். அப்போது வினுஷா மேட்டரை இழுத்து அர்ச்சனா கேள்வி கேட்டதும் கடுப்பான நிக்சன், அர்ச்சனாவை மரியாதைக்குறைவாக பேசியதோடு, இனி வினுஷா பத்தி பேசுனா சொருகீருவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது. இந்த விவகாரத்தை கமல்ஹாசன் எப்படி கையாள்வார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

அவர் எதிர்பார்த்தபடியே நிக்சனை மிரள வைத்திருக்கிறார் கமல். அர்ச்சனா உரிமைக்குரல் எழுப்பியதால் நிக்சனில் கேள்வி எழுப்பிய கமல், சொருகீருவேன்னு சொன்னீங்களே வயித்துல சொருகுவீங்களா, நெஞ்சில சொருகுவீங்களா இல்ல கண்ணுலயா என வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டுவது போல் கோபத்துடன் கண்ணை விரித்துக் காட்டி உள்ளார். இதைப்பார்த்து வெடவெடத்துப்போன நிக்சனிடம் மஞ்சள் நிற வார்னிங் கார்டை காட்டி உங்களால இதுல தான் சொருக முடியும் என வச்சி செய்திருக்கிறார் ஆண்டவர்.

Bigg Boss Tamil Season 7 | 9th December 2023 - Promo 2 pic.twitter.com/wx8KiD7HIV

— Vijay Tv (@PromosTele)

இதையும் படியுங்கள்... தரம் கெட்ட விளையாட்டு விளையாடுறாங்க... பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது செம்ம கடுப்பில் கமல் - சிக்கப்போவது யார்?

click me!