பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா உடனான வார்த்தை மோதலின் போது அவரை மிரட்டும் வகையில் பேசிய நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வார வாரம் ஒரு சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து அவரை வெளுத்து வாங்கி உள்ளார் அர்ச்சனா. வினுஷா பிக்பாஸில் வீட்டில் இருக்கும் போது அவரை நிக்சன் உருவகேலி செய்து பேசியது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
வினுஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் இந்த விஷயம் பெரிதானதால் அவர் பேட்டிகளில் நிக்சன் மீதான அதிருப்தியை தெரிவித்ததோடு, அவனை மன்னிக்கவே மாட்டேன் என்றும் கூறி இருந்தார். இந்த விஷயத்தை வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்த அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா இருவரும் நிக்சன் காதுக்கு கொண்டு போக, உடனே அவர் வெளியே சென்றதும் வினுஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், இன்று நிக்சன் அர்ச்சனா அடிக்கடி அழுவதாக கூறி அவர் இந்த விளையாட்டுக்கு பொருத்தமானவரே இல்லை எனக்கூறியதை அடுத்து, கடுப்பான அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்து நீ ஐஷூவை தனியா கூட்டுட்டு போய் பேசியே அவளை வெளியேத்திட்ட, வினுஷாவை பத்தி தப்பு தப்பா பேசியிருக்க இதைவிட நீ ஒன்னுமே செய்யல என சொன்னதும் கடுப்பான நிக்சன் இனி வினுஷா பத்தி பேசுனா சொருகிருவேன் என கொலை மிரட்டல் விடும் வகையில் பேசினார்.
vs fight started only started the topic of first followed by
Who is right comment with valid reasons? pic.twitter.com/aMmbqMnnCh
நிக்சனின் இந்த பேச்சைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து தினேஷ், விஷ்ணு ஆகியோரிடம் பேசிய அர்ச்சனா, நிக்சனால் தனக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் தான் இந்த வாரம் உரிமைக்குரல் எழுப்ப உள்ளதாக கூறினார். ஏற்கனவே பிரதீப்புக்கு எதிராக மாயாவும் அவரது புல்லி கேங்கும் உரிமைக்குரல் எழுப்பியதால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன். அதேபோல் இந்த வாரம் அர்ச்சனா நிக்சனுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினால் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Promo 3 decides to raise urimai kural against threatening feminists true colors theriya pothu 😂 💯 pic.twitter.com/8o2mhY1m8X
— Mr. Nobody Das 🧊🔥🗿 (@Mr_Nobody_das)இதையும் படியுங்கள்... சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகீருவேன்... அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் - ரெட் கார்டு கொடுப்பாரா கமல்?