பிக்பாஸ் வீட்டில் விஜே அர்ச்சனாவும் விஷ்ணு விஜய்யும் மீண்டும் மோதிக்கொண்டதை சக போட்டியாளர்கள் கைதட்டி சிரித்து வேடிக்கை பார்த்த புரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சண்டையையே யுக்தியாக பயன்படுத்தி இந்த சீசனில் விளையாடி வருபவர் தான் விஷ்ணு விஜய். இவர் சண்டைபோட்டு டார்கெட் செய்த அக்ஷயா கடந்த வாரம் எலிமினேட் ஆனதால், தன்னுடைய கேம் பிளான் ஒர்க் அவுட் ஆவதாக நினைத்து இந்த வாரம் அர்ச்சனாவை டார்கெட் செய்து அவருடன் தினசரி ஏதாவது ஒரு விஷயத்துக்காக சண்டைபோட்டு வருகிறார்.
நேற்று கோல்டன் ஸ்டார் கொடுக்கப்பட்ட விஷயத்தில் விஷ்ணு - அர்ச்சனா இடையே மோதல் ஏற்பட்டது. இதை சக போட்டியாளர்கள் யாரும் தடுக்காமல் சண்டையை வேடிக்கை தான் பார்த்து வந்தனர். விஷ்ணு தான் செய்வது தான் சரி என நினைத்து அர்ச்சனாவை ஒருமையில் பேசி சண்டையிட பதிலுக்கு அர்ச்சனாவும் நீயெல்லாம் இந்த குப்பை தொட்டிக்கு சமம் எனக்கூறி அவரை வெளுத்து வாங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் விஷ்ணுவும் அர்ச்சனாவும் கையில் கயிற்றை கட்டிக்கொண்டு ஒரே டீமாக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் அமைதியாக இருக்க, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா, விஷ்ணுவிடம் வந்து ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகாதீங்க, சண்டை போடுங்க என ஏத்திவிட, இதைக்கேட்டு கடுப்பான அர்ச்சனா, நான் எமோஷனலா பிரேக் ஆகுறது உங்களுக்கெல்லாம் ஜாலியா இருக்கா என கேட்கிறார்.
சும்மா விளையாட்டா பேசிக்கிட்டு இருந்தேன் என்னை எதுக்கு திட்டுறீங்க என அர்ச்சனாவை பார்த்து ரவீனா கேட்க, விஷ்ணுவும் அர்ச்சனாவும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். ஒருகட்டத்தில் விஷ்ணுவின் பேச்சால் எரிச்சலடைந்த அர்ச்சனா, இந்த ஆளோட எனக்கு இருக்கனும்னு அவசியமே இல்லை எனக்கூறிவிட்டு கயிற்றை கழட்டி எறிந்து கேமை விட்டு வெளியேறுகிறார். இப்படி ரவீனா சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி கைதட்டி சிரிப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை விஷம் என விமர்சித்து வருகின்றனர்.
Promo 2 pic.twitter.com/Olvaxf7daH
— Sysexpress (@Sysexpres)இதையும் படியுங்கள்... இந்த சீனெல்லாம் இங்க செல்லாது; நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே சம்பளபாக்கிய கொடு- ஞானவேலை எச்சரித்த சமுத்திரகனி