ஒரே அசிங்கமா போச்சு குமாரு... ஜோவிகா போல் வழுக்கி விழுந்த மாயா - லொடுக்கு பாண்டி போல் நடந்துவந்த வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Nov 29, 2023, 4:17 PM IST

பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா அடிக்கடி வழுக்கி விழுந்து வந்த நிலையில், தற்போது அவரைப்போல் மாயா வழுக்கி விழுந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் வீட்டில் மிகவும் அடிவாங்கிய போட்டியாளர் என்றால் அது ஜோவிகா தான். இவர் அங்குள்ள கார்டன் ஏரியாவில் அடிக்கடி வழுக்கி விழுந்தது ஒரு மீம் டெம்பிளேட் ஆகவே மாறியது. வனிதாவே ஜோவிகா வழுக்கி விழுந்ததை பார்த்து சிரித்ததோடு, அவளுக்கு இது தேவை தான், நல்லா அடி வாங்கட்டும் என திட்டி இருந்தார். இந்த நிலையில், ஜோவிகாவை போல் மாயாவும் பிக்பாஸ் வீட்டில் வழுக்கி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிடம் பேசிக்கொண்டிருந்த மாயா, தான் எப்படி ஓடுகிறேன்னு பாருங்க என சொல்லி கார்டன் ஏரியாவில் வேகமாக ஓடினார். மழைபெய்து அங்குள்ள வழித்தடத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததை கவனிக்காமல் அதில் மாயா ஓடும் போது மட்ட மல்லாக்க விழுந்துள்ளார். அவர் விழுந்ததை பார்த்ததும் அங்கிருந்த ஜோவிகா, ரவீனா, மணி, பூர்ணிமா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் அவரைப் பார்த்து விஷ பாட்டில் உடைந்ததா என பூர்ணிமா கேட்க, அங்க ஒரே விஷமா இருக்கு பார்த்து போங்க என கூறியபடி லொடுக்கு பாண்டி ஸ்டைலில் நடந்து வந்தார் மாயா. அவர் நடந்து வந்ததை பார்த்து ஜோவிகாவும், ரவீனாவும் வயிறுவலிக்க சிரித்த அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வார இறுதியில் விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தனர். அப்போது நடைபெற்ற டாஸ்க்கில் அனன்யா ராவ், மாயாவுக்கு விஷ பாட்டில் என்கிற பெயர் கொண்ட பேண்ட்-ஐ மாட்டிவிட்டார். அதில் இருந்து மாயாவை போட்டியாளர்கள் அனைவரும் விஷ பாட்டில் என கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

fall down pic.twitter.com/mzHicP9Dgj

— unseen_b_b (@bb_unseen)

இதையும் படியுங்கள்... எத்தனை கோடி கொடுத்தாலும்.. பிற மொழிகளில் நடிக்கவே மாட்டேன்- ஓப்பனாக அறிவித்த காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி

click me!