பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட புது விதியால் இந்த வார கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வாரவாரம் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் நிக்சன், விஷ்ணு மற்றும் ஜோவிகா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில் வெற்றிபெற்று நிக்சன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதன்முறையாக கேப்டன் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார்.
வழக்கமாக கேப்டன் பதவி கிடைக்கும் போட்டியாளர்களுக்கு சில சலுகைகளும் இருக்கும். அந்த போட்டியாளரை யாரும் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது. அதோடு பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளுக்கும் சென்று வரும் பவர் கேப்டனுக்கு கிடைக்கும். கேப்டன் ஆனால் ஒரு வாரம் முழுக்க எவிக்ஷன் பயம் இன்றி நிம்மதியாக இருக்க முடியும் என்பதால் தான் அதற்கு போட்டியாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் இம்முறை கேப்டன் ஆன நிக்சனுக்கு ஏண்டா கேப்டன் ஆனோம் என எண்ணும் அளவுக்கு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் பிக்பாஸ். அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் புதிதாக மணி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. நிக்சனின் கேப்டன்சியில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என நினைத்தால், போட்டியாளர்கள் நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
மணியை அடிக்கும் நபரின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிக்சனின் கேப்டன் பதவி பறிக்கப்படுவதோடு, அடுத்தவார நாமினேஷனுக்கு அவர் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் பிக்பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இதையடுத்து பிளான் போட தொடங்கிய பூர்ணிமாவும், மாயாவும் நிக்சன் எலிமினேஷனுக்கான வேலையை நாம் பார்க்கலாம் என பேசிக்கொள்ளும் காட்சியும் புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் இந்த வாரம் நிக்சனின் கேப்டன் பதவி பறிபோவது உறுதி என்பது மட்டும் தெரிகிறது.
PROMO 1 ! pic.twitter.com/iSVbZdXgZH
இதையும் படியுங்கள்... சினிமாவை போல் அரசியலிலும் மாமன்னனாக மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலினின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ