பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவும், விஷ்ணுவும் வாக்குவாதம் முற்றி சண்டையிட்டுக்கொண்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, முதல் வாரத்தில் அழுது புலம்பினாலும், போகப்போக சண்டைக்கோழியாக மாறினார். பிரதீப் விஷயத்தில் மாயா, பூர்ணிமாவின் புல்லி கேங்கை ஒற்றை ஆளாக சமாளித்து அப்ளாஸ் வாங்கினார். இதையடுத்து அர்ச்சனாவுக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அவர் விஷ்ணு உடன் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று காலை லிவ்விங் ஏரியாவில் நிக்சனின் கேப்டன்சியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்த விஷ்ணு, அர்ச்சனாவை பார்த்து பொளீர் பொளீர்னு நம்ம டயலாக்லயே வச்சு செய்யலாம் என சொன்னதும் கடுப்பான அர்ச்சனா, எங்க அடிங்க பார்ப்போம்னு ஓவியா பாணியில் எகிறி வர இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போனது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதைப்பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணுவை திட்டித்தீர்த்து வருகின்றனர். விஷ்ணு இதற்கு முன் அக்ஷயாவை டார்கெட் செய்து வெளியேற்றியதை போல் அர்ச்சனாவையும் வெளியேற்றிவிடலாம் என நினைத்து இப்படி செய்து வருவதாகவும், ஆனால் உண்மையில் அவர் செய்வது கோமாளித்தனமான வேலை என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் அவரை அமுல் பேபி என்றும் கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.
Polir polir nu dialogue laiye vachu seyyalam😡👎 to 🔥 Aalu valarntha alavukku arivu valarala 😅🤣
👶amul baby🍼🐥🧸 vachu senjathu kadaisila archana
😅comali🃏👻 pic.twitter.com/DcYC6zTxZV
ஒருசிலரோ விஷ்ணு அந்நியன் பட விக்ரம் போல் நடந்துகொள்வதாக ஒப்பிட்டு மீம் போட்டு வருகின்றனர். வாரத்தின் முதல் 3 நாள் அந்நியன் போன்று யாருடனாவது சண்டை போடுவதாகவும், அடுத்த 3 நாள் ரெமோவாக மாறி பூர்ணிமா உடன் கடலை போடுவதாகவும், வார இறுதியில் கமல்ஹாசன் முன்பு அம்பி போல முகத்தை வைத்துக்கொண்டு கேம் விளையாடி வருவதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
Polir polir nu dialogue laiye vachu seyyalam😡👎 to 🔥 Aalu valarntha alavukku arivu valarala 😅🤣
👶amul baby🍼🐥🧸 vachu senjathu kadaisila archana
😅comali🃏👻 pic.twitter.com/DcYC6zTxZV
இதையும் படியுங்கள்... 41 வயதிலும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகை குத்து ரம்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?