பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபிரீஸ் டாஸ்க்கில் விசித்ராவின் கணவர் மற்றும் மகன்கள் கடைசியா எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் முழுக்க பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலில் பூர்ணிமா, அர்ச்சனா, விஜய் வர்மா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரின் குடும்பத்தார் ஒரே நேரத்தில் உள்ளே அனுப்பப்பட்டனர். வழக்கமாக ஒவ்வொரு பேமிலி வந்து சென்ற பின்னர் தான் அடுத்த பேமிலி உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால் இம்முறை அனைவரையும் மொத்தமாக அனுப்பி அவர்கள் அதிக நேரம் போட்டியாளர்களுடன் செலவிடும் படி ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து இரண்டாவது நாளில் தினேஷின் பெற்றோர், மணியின் அம்மா, விஷ்ணுவின் சகோதரிகள் மற்றும் அர்ச்சனாவின் தங்கச்சி ஆகியோர் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இதையடுத்து நேற்று பூர்ணிமாவின் சகோதரர், மாயாவின் அக்கா மற்றும் அம்மா, ரவீனாவின் அத்தை, மணியின் அண்ணன், சரவண விக்ரமின் சகோதரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தங்கள் பாசமழையை பொழிந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து சென்ற நிலையில், விசித்ராவின் பேமிலி மட்டும் எண்ட்ரி கொடுக்காமல் இருந்தனர். அவர்களை இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். முதலில் விசித்ராவின் கணவர் மெயின் டோர் வழியாக எண்ட்ரி கொடுக்கும்போது உனக்காக பொறந்தேனே எனதழகா என்கிற பாடல் ஒழிக்க செம்ம ரொமாண்டிக்காக வந்து தன் மனைவி விசித்ராவுக்கு பூவை கொடுத்து புரபோஸ் செய்தார் அவரின் கணவர் ஷாஜி.
இதையடுத்து விசித்ராவை பிக்பாஸ் கன்பெஷன் ரூமுக்கு அழைத்த உடன், அவரின் மகன்கள் மூன்று பேரும் ஸ்டோர் ரூம் வழியாக சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர். பின்னர் டாஸ்க் லெட்டர் உடன் கன்பெஷன் ரூமில் இருந்து வந்து லிவ்விங் ஏரியாவில் உள்ள ஷோபாவின் முன் நின்று அந்த லெட்டரை படிக்கும் போது தன் மகன்கள் மூவரும் முன்பு அமர்ந்திருப்பதை பார்த்து விசித்ரா வாயடைத்துப்போனது புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
" BEST PROMO OF THIS SEASON "
So Beautiful & Soulful ❤️ Like a Romantic movie scene..!!!She Deserves All The Love ma 🥰🥰
Repeat Mode Watch 🔥🔥 pic.twitter.com/mFjkHMx388
இதையும் படியுங்கள்... திரிஷாவுக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு... மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்-நீதிமன்றம் அதிரடி