உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நேற்று தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் இன்று தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து இம்மாதம் 21ஆம் தேதி சென்னை திருநங்கை நாயக்கர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக கூவாகம் திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான அழகி போட்டி நடத்தப்பட்டது. அதே போன்று 22ம் தேதி தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் அழகிப்பட்டி நடைபெற்று முடிந்தது.
மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு; வைகோ கடும் கண்டனம்
மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் அரவான் சுவாமி அவர்களை கணவராக நினைத்து கோவில் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டனர். தங்களுடைய நீண்டகால தோழிகளை கண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வனவிலங்கு வேட்டை; எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு போலீஸ் வலை
மேலும் இன்று காலை 6.30 மணி அளவில் அரவான் பலியிடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கோவில் பூசாரிகள் திருநங்கைகளுக்கு கட்டிய தாலியை அறுத்தனர். தொடர்ந்து கூத்தாண்டவர் கோவில் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்று முடிந்தது. 30 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இறுதி கட்டம் முடிந்ததும் திருநங்கைகள் தங்களுடைய ஊருக்கு திரும்பி செல்வர்.