விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(21). இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதால் தனது எதிர்கால கணவருடன் பக்கத்து ஊரான புத்தகரம் கிராமத்துக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
செஞ்சி அருகே இன்னும் 10 நாள்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(21). இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதால் தனது எதிர்கால கணவருடன் பக்கத்து ஊரான புத்தகரம் கிராமத்துக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: கல்யாணத்த கிட்ட வச்சுக்கிட்டு செய்ற வேலைய இது! ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்ட IT ஊழியர்!இறுதியில் நடந்த ட்விஸ்ட்
அப்போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் காயத்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். வருங்கால கணவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக நல்லாண் பிள்ளை பெற்றாள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: செம்ம ஹாப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.