குறிப்பிட்ட சமூக மக்களை ஏமாற்றி அன்புமணி பிழைப்பு நடத்துகிறார் - சி.வி.சண்முகம் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 17, 2024, 3:37 PM IST

குறிப்பிட்ட சமூக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் பரிசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை எங்கு பார்த்தாலும் துரோகம் செய்துவிட்டதாக அன்புமணி விமரிசிக்கிறார். அன்று என் வீட்டிற்கு இட ஒதுக்கீட்டிற்காக வந்தவர் அன்புமணி. இன்று வழக்கிற்காக பாஜக.விற்கு  பயந்து எங்களை விமர்சிக்கிறார்.

தேனியில் மீண்டும் போட்டியிடுவது தினகரனின் பூர்வ ஜென்மத்து புண்ணியம் - பெண்களிடம் ஸ்கோர் செய்யும் அனுராதா தினகரன்

Tap to resize

Latest Videos

undefined

நன்றி கெட்டவர் என்பதற்கு உதாரணம் அன்புமணி. குறிப்பிட்ட சமூக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிற குடும்பம் அன்புமணி குடும்பம். 2006லேயே உங்களை பார்த்தவன் இந்த சண்முகம். நீங்கள் கொலைகார குடும்பம், நன்றி கெட்ட குடும்பம். அம்மாவையும், அதிமுகவையும் எதிர்த்ததால் வாஜ்பாய் அரசை கவிழ்த்த இயக்கம் அதிமுக.

முதியோர் இல்லத்தில் கண்கலங்கி அண்ணாமலை; பாஜக ஸ்டைலில் ஆறுதல் சொன்ன முதியவர்கள்

அதிமுகவை எதிர்த்தவர்களையும், துரோகிகளைகளையும் காணாமல் போக செய்த இயக்கம் அதிமுக. அண்ணாமலையும், பாஜகவும் இந்த தேர்தலுக்கு பின் காணாமல் போவார்கள். அண்ணாமலை அதிமுகவை பற்றி பேசுவதா? மோடி நடத்துகின்ற ரோடு ஷோ இறுதி யாத்திரையை போன்று உள்ளது. ஏனென்றால் அவர்கள் செல்லும் வாகனத்தில் இறுதி ஊர்வலத்திற்கு செல்வது போன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இருந்து போதை பொருட்களை இறக்குமதி செய்யும் மோடிக்கும், அண்ணாமலைக்கும் இது கடைசி தேர்தல் என்று விமர்சித்தார்.

click me!