Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 40ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார்.
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷாய் ஹோப் மற்றும் சுமித் குமார் இருவரும் இடம் பெற்றுள்ளனர். குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
டெல்லி கேபிடல்ஸ்:
பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சகா (கேப்டன்), சுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், அஷ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ஷாருக் கான், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர்.
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match
டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. மேலும், குஜராத் டைட்ன்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 6ஆவது இடத்தில் உள்ளது.