Chennai Super Kings
ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் எல்லோருமே நிபுணர்கள் தான். எப்படி என்றால், எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள், எந்த அணி டிராபியை வெல்லும், எந்த வீரர் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுப்பார் என்பது குறித்து கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பாக விளையாடி 8 போட்டிகளில் 7ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றும் உறுதியாகிவிட்டது.
IPL 2024
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், குறைந்தது 14 முதல் 16 புள்ளிகள் வரை பெற்றிருக்க வேண்டும்.
CSK Play Offs
தற்போது ராஜஸ்தான் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2, 3 மற்றும் 4ஆம் இடங்களை பிடித்துள்ளன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டால் 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி முதலிடம் பிடிப்பதில் உறுதியாக இருக்கும்.
CSK Play Off Chance
ஐபிஎல் கிரிக்கெட்டில் நிலையான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. சிஎஸ்கே 5 முறை டிராபியை வென்றுள்ளது. 10 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. மேலும், 2 முறை மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 232 போட்டிகளில் 135 போட்டிகளில் மகத்தான் வெற்றியை பெற்றுள்ளது.
Chennai Super Kings, IPL 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பலமே எம்.எஸ்.தோனி தான். கேப்டனாக இல்லையென்றாலும், மைதானத்தில் அவரது கேப்டன்ஷிப் ரசிகர்களை வியக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இந்த சீசன் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று பலரும் நம்புவதால், எப்படியும் சிஎஸ்கே டிராபியை வெல்ல வேண்டும் என்று குறிக்கோளாக இருக்கும்.
MS Dhoni, IPL 2024
சிஎஸ்கே எஞ்சிய 6 போட்டிகளில் ஒரு முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் 2 முறையும், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகிறது. இதில், பஞ்சாப், குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுடன் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
IPL 2024, Chennai Super Kings
ஸ்பின்னர்களை அட்டாக் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணியில் இருக்கின்றனர். குறிப்பாக ஷிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். சிஎஸ்கேயின் நம்பிக்கை தோனி என்றால், பலம் ஷிவம் துபே மற்றும் மதீஷா பதிரனா தான். தேவைப்படும் போது ரன்கள் எடுத்துக் கொடுப்பதிலும், தேவைப்படும் போது விக்கெட்டுகள் எடுத்துக் கொடுப்பதிலும் கில்லாடி.
Chennai Super Kings, IPL 2024
ஐபிஎல் 2024 ல் டிராபியை எந்த அணி கைப்பற்றும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், இது போன்ற காரணிகளை ஆராய்ந்து பார்த்தால், சிஎஸ்கே 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.