கிரிக்கெட்டின் மகத்துவத்தை உணர்த்தும் சச்சின் டெண்டுல்கரின் வியக்க வைக்கும் 10 சாதனைகள்!

First Published Apr 24, 2024, 12:29 PM IST

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

HBD Sachin Tendulkar

மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார்.

HBD Sachin Tendulkar

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதில், வியக்க வைக்கும் டாப் 10 சாதனைகளின் பட்டியலை பார்க்கலாம்.

HBD Sachin

அதிக சர்வதேச ரன்கள்:

கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் அனைத்து வடிவங்களிலும் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார்.

Sachin 51st Birthday

அதிக சர்வதேச சதங்கள்:

200 டெஸ்ட், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இதில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் விளாசியுள்ளார்.

Sachin Tendulkar

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்:

கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 45 போட்டிகளில் விளையாடி 2,278 ரன்களுடன் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Sachin Tendulkar

அதிக டெஸ்ட் போட்டிகள்:

டெஸ்ட் கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம், அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். இதில், 15,921 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 51 சதங்கள், 68 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

Sachin Tendulkar 51st Birthday

அதிக ஒருநாள் போட்டிகள்:

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18, 426 ரன்கள் குவித்துள்ளார். இதில், 49 சதங்கள், 96 அரைசதங்கள் அடித்துள்ளார்.

Indian Cricket Team

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்:

கடந்த 2010 ஆம் ஆண்டில், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த 2ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் குவித்தது. இதில், சச்சின் டெண்டுல்கர், 147 பந்துகளில் 25 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 200 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

Sachin Tendulkar 51st Birthday

ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்து சாதனை:

கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சச்சின் 1894 ரன்கள் எடுத்துள்ளார்.

Happy Birthday Sachin Tendulkar

ஒருநாள் கிரிக்கெட் அதிக அரைசதங்கள்:

சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 96 அரைசதங்களும், 49 சதங்களும் விளாசியுள்ளார். இந்த சாதனையை இதுவரையில் முறியடிக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி 49ஆவது சதம் அடித்து சாதனையை சமன் செய்து 50ஆவது சதம் அடித்து முறியடித்தார்.

Sachin Tendulkar

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருது:

இக்கட்டான தருணங்களில் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பாக விளையாடி 62 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

HBD Sachin Tendulkar:

ஒரே ஆண்டில் அதிக சதங்கள்:

கடந்த 1998 ஆம் ஆண்டில் நடந்த அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இடம் பெற்று விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் 12 சதங்கள் விளாசி ஒரே ஆண்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

click me!