Coolie: ஆரம்பமே அதிருத்தே..! அதிரடியோடு வெளியானது தலைவரின் 171-ஆவது பட டைட்டிலான 'கூலி' !

Apr 22, 2024, 6:11 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடைசியாக 'லியோ' படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் நடிக்கும் 171-ஆவது படத்தை இயக்க உள்ள தகவலை உறுதி செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இன்னும் நின்னிறைவடையாததால், தலைவர் 171-ஆவது  படம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் கூலி என்பதை படக்குழு அதிரடியான டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.