Isaivani
இந்த சூழலில் "ஐ அம் சாரி ஐயப்பா.. கோவிலுக்குள் பெண்கள் வந்தால் தப்பா" என்ற வரிகள் அமைக்கப்பட்ட பாடல் ஒன்று இந்த கேஸ்டெல்ஸ் கலெக்ஷன்ஸ் குழுவால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டது. இந்த பாடலின் முக்கிய பாடகியாக திகழ்ந்தவர் இசைவாணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பாடலை அவர் பாடிய பொழுது கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு பாடியதால் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் இசைவாணி இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக கூறி அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டது. பா. ரஞ்சித் மீதும் இந்த விஷயம் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் பிரபல இயக்குனர் மோகன் ஜி, இசைவாணியை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
Singer Isaivani
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோஷங்கள் பரவலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணி பாடிய அந்த பாடல் மீண்டும் இணையத்தில் பெரிய அளவில் வைரலாக தொடங்கியது. இசைவாணிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து குவிவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இசைவாணிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டு இருக்கிறார்.
Ranjith
அதில், இசைவாணி பாடிய பாடல் மதம் சார்ந்த பாடல் அல்ல. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு பாடல் தான். ஆனால் அதை அப்படியே திரித்து, பிற மதங்களோடு சம்பந்தப்படுத்தி அதை மதப் பிரச்சினையாகி வருவதோடு இசைவாணியை கொச்சையாக கடந்து சில நாட்களாக இணையத்தில் வசைபாடி வருவது ஏற்க முடியாதது. ஆகவே ஜனநாயகத்தை மட்டுமே நம்பும் சக்திகள் அனைவரும் இசைவாணியோடு உடன் நின்று அவருக்கு உதவ வேண்டும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி இருக்கிறார் பா ரஞ்சித்.
சங்கரை கைவிட்ட இந்தியன் 2; ஆனா கேம் சேஞ்சர் அப்படி இல்ல - ரிலீசுக்கு முன் படைத்த சாதனை!