ரஜினி - கமல் படத்துக்கு கூட கிடைக்காத மவுசு! தமிழில் முதலில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன படம் எது தெரியுமா?

Published : Nov 25, 2024, 10:04 PM IST

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் படமே ரூ.50 லட்சம் வியாபாரம் ஆன சமயத்தில், முதல் முதலில் ரூபாய் 1 கோடி வியாபாரம் செய்யப்பட்ட படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
ரஜினி - கமல் படத்துக்கு கூட கிடைக்காத மவுசு! தமிழில் முதலில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன படம் எது தெரியுமா?
Dhavani kanavugal

எப்போதுமே முதல் என்கிற வார்த்தைக்கு உள்ள வலிமை அதிகம். முதலில் வருபவர்களை தான் இந்த உலகமும் நினைவில் கொள்ளும். உதாரணத்திற்கு எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், கமல், போன்ற முன்னணி நடிகர்களை தான் பல ரசிகர்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்வார்கள். இது உள்ளூரில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும்.

26
Sivaji Ganesan Acting Main Role

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், தமிழில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு... விநியோகஸ்தர்களுக்கு கோடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் 80பது, 90-காலகட்டங்களில் லட்ச கணக்கில் மட்டுமே வியாபாரம் நடந்த நிலையில், முதல் முதலில் ரூ.1 கோடி வியாபாரம் செய்யப்பட்ட முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து கவிழ்ந்து காந்தாரா படப்பிடிப்பில் விபத்து; நடிகர்கள் காயம்!

36
Bhagyaraj Movie

இந்த ரூ.1 கோடி வியாபாரம் ஆன படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல பாக்யராஜ் தான். 1984-ஆம் ஆண்டு பாக்கியராஜ், எழுதி, இயக்கி, தயாரித்திருந்த திரைப்படம் 'தாவணி கனவுகள்'. இந்த படம் தான் ரூ.1 கோடி வியாபாரம் ஆன முதல் படம் ஆகும்.

46
Dhavani kanavugal Movie Cast

இந்த படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக, ராதிகா நடிக்க சிவாஜி கணேஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், உமா பாரதி, நித்யா, பிரியதர்ஷினி, பார்த்திபன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறப்பு தோற்றத்தில் பாரதிராஜா, ராதா, மயில் சாமி, சித்ரா லக்ஷ்மணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

பிரமாண்ட வீடு; ராஜ வாழ்க்கை வாழும் அப்பாவுக்கு இரண்டு மனைவிகளோடு சிலை வைத்த முன்னணி ஹீரோ!

56
Dhavani kanavugal First Movie Salre 1 Crore

இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் பலர், படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால், இந்த படத்தை வாங்க போட்டி போட்டுள்ளனர். அந்த சமயத்தில் ரஜினி - கமல் ஆகியோர் முன்னணி நைடகர்களாக இருந்த போதும், அவர்களின் படங்கள் லட்சங்களில் மட்டுமே வியாபாரம் ஆன நிலையில், இந்த படத்தை முதல் முறையாக பிரபல விநியோகஸ்தர் ரூபாய் 1 கோடி கொடுத்து வாங்கி தமிழகத்தில் வெளியிட்டுள்ளார். 

66
Dhavani kanavugal cross 100 days

அவர் நினைத்தது போலவே இந்த படம் இரண்டு மடங்கு லாபம் பார்த்ததோடு... 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கிலும் Ammayilu Preminchandi என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

காதலை வெளிப்படுத்திய பின்னர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா போன லன்ச் டேட்! வைரல் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories