
‘காந்தாரா’ படம் கடந்த 2022-ஆம் ஆண்டு பான்-இந்தியா திரைப்படமாக நாடு முழுவதும் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ரிஷப் ஷெட்டி தனது கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கி - நடித்திருந்த இப்படம் ஓட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன் கவர்ந்த தனித்துவமான படைப்பாக இருந்தது.
இந்த படத்தின் , இறுதி அரை மணி நேரம் நம்மை ஆன்மீக உலகில் சஞ்சரிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக ரிஷிப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 'காந்தாரா' திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரில், விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'காந்தாரா சேப்டர் 1' என்கிற பெயரில் இப்படத்தின் முதன்மை பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே காந்தாரா சேப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரமாண்ட வீடு; ராஜ வாழ்க்கை வாழும் அப்பாவுக்கு இரண்டு மனைவிகளோடு சிலை வைத்த முன்னணி ஹீரோ!
படப்பிடிப்புக்காக ஜூனியர் கலைஞர்களைக் ஏற்றிக்கொண்டு, சென்ற மினி பேருந்து செல்லும் வழியில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. கர்நாடக மாநிலம் கொல்லூர் அருகே உள்ள ஜட்கல் அருகே பேருந்து கவிழ்த்துள்ளது. பேருந்தில் 20 பேர் இருந்த நிலையில், இதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பை உடனடியாக கேன்சல் செய்த படக்குழு, உடனடியாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகில் பேரும் பொருளாக மாறியுள்ளது.
‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ மூலம் விஜய் கிரகந்தூர் தான் ‘காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். ரிஷப் ஷெட்டி இந்த படத்தை இயக்கி - நடிக்கிறார். ‘காந்தாரா’ படத்தின் முந்தைய பாகமாக, ‘காந்தாரா: முதல் அத்தியாயம்’ எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா: முதல் அத்தியாயம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி இந்தப் படம் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
காதலை வெளிப்படுத்திய பின்னர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா போன லன்ச் டேட்! வைரல் போட்டோஸ்!
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதாவது சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. மேலும், தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. காந்தாரா படத்திற்கு முன்பு என்ன நடந்தது என்ற கருப்பொருளில் இந்தப் படத்தை இயக்குகிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாராவில் காட்டப்பட்ட கதைக்கு முன்பு நடக்கும் கதை என்பதால் இந்த படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
‘காந்தாரா’ மூலம் கொங்கன் நாட்டுப்புற வாழ்க்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி. தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என பெயர் பெற்ற கடம்ப ராஜ்ஜியத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. மூன்றாம் நூற்றாண்டின் கடம்ப ராஜ்ஜியத்தின் சிறப்பையும், அக்காலத்தின் அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையில், கர்நாடகாவில் உள்ள குந்தாபுர என்ற இடத்தில் இந்தப் படத்தின் செட் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய யுத்த கலையான களரிப்பயிற்றி மேற்கொண்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. மேலும் 'காந்தாரா' படத்தை விட 'காந்தாரா: சேப்டர் 1' அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!