நேரடியா ஒரு தமிழ் படம்; ரஜினி பட இயக்குனருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அல்லு அர்ஜுன்!

Ansgar R |  
Published : Nov 25, 2024, 06:00 PM IST

Allu Arjun : பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் 2ம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
14
நேரடியா ஒரு தமிழ் படம்; ரஜினி பட இயக்குனருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அல்லு அர்ஜுன்!
Allu Arjun

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்னும் நேரடியாக எந்த திரைப்படமும் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்போடு வலம் வரும் நடிகர் தான் அல்லு அர்ஜுன். கடந்த 2021ம் ஆண்டு அவருடைய புஷ்பா திரைப்படம் உலக அளவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழகத்திலும் அந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு, தன்னுடைய அடுத்த திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பிரீ ரிலீஸ் கலெக்ஷனாகவே சுமார் 620 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட வீடு; ராஜ வாழ்க்கை வாழும் அப்பாவுக்கு இரண்டு மனைவிகளோடு சிலை வைத்த முன்னணி ஹீரோ!

24
Pushpa 2

இந்நிலையில் இன்னும் பத்து நாட்களில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் நாயகி ராஷ்மிகா மந்தானா ஆகிய இருவரும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்டனர். "என்னுடைய பயணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இந்த சென்னை மண்ணில் இருந்து தான். ஆகவே இந்த மண் எனக்கு மிகவும் ஸ்பெஷல். உளவியல் ரீதியாக நான் தொடங்கிய இடத்திலேயே இப்போது இருக்கிறேன். தமிழ் மக்கள் தரும் இந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியை அளிக்கிறது" என்று கூறி நேற்று நடந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி அசத்தியிருந்தார் அல்லு அர்ஜுன்.

34
Rashmika Mandanna

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும் இந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாக நிகழ்வில் பங்கேற்றார். அப்போது நீங்கள் பல சூப்பர் ஸ்டாரர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறீர்கள். எப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படத்தை இயக்கப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, இந்த கேள்விக்கான பதில் என்னிடம் கிடையாது. அல்லு அர்ஜுன் போன்ற ஒரு நடிகரை இயக்குவதற்கு நான் எப்பொழுதும் தயாராக தான் இருக்கிறேன். ஆகவே இதற்கான பதில் அல்லு அர்ஜுனிடமிருந்து தான் வர வேண்டும் என்று கூறினார்.

44
Nelson Dilipkumar

மேலும் ஏற்கனவே அல்லு அர்ஜுனுடனும் நான் கதை சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் பலமுறை அதை செய்யாமல் விட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அல்லு அர்ஜுன் இவ்வளவு அழகாக தமிழ் பேசும் பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார் நெல்சன். தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நெல்சனுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்ட பொழுது. தனது கைகளை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

ஓகே கண்மணி முதல்; லக்கி பாஸ்கர் வரை - பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த துல்கரின் படங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories