
தமிழ் திரையுலகில் பல தடுமாற்றங்களை கடந்து, திரையுலகில் சாதித்த நடிகர் அருண் விஜய் தான்... தன்னுடைய அப்பா மற்றும் அவருடைய இரண்டு மனைவிகளையும் பெருமை படும் விதத்தில் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக பிரபலங்கள் பலர் தங்களுடைய பெற்றோர்களை பெருமை படுத்தும் விதமாக உயிரோடு இருக்கும் போதே அவர்களுக்கு சிலை வைத்து கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அம்மாவுக்கு சிலை வைத்துள்ளதை தொடர்ந்து, தற்போது பிரபல நடிகர் அருண் விஜய்யும் அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்த சொந்த ஊரில் உள்ள கிராமத்து வீட்டில் நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகளுடன் இருக்கும் சிலையை வைத்துள்ளார்.
காதலை வெளிப்படுத்திய பின்னர் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா போன லன்ச் டேட்! வைரல் போட்டோஸ்!
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருவதோடு, ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 1961- ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயகுமார், 1970-களில் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அழகும், திறமையும் இருந்தும் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகனாக நடிக்கும் வாய்ப்பே இவருக்கு கிடைத்தது.
பின்னர் அதுவும் குறைந்த போக, காலத்திற்கு ஏற்றாப்போல் தன்னை குணச்சித்திர வேடங்களுக்குள் புதைத்து கொண்டார். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜுன், விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சுமார், 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகுமார், 3 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரில் நடித்து வருகிறார்.
13 வருடங்களுக்கு பின் தாயானார் வித்யா பிரதீப்; வைரலாகும் குழந்தையின் கியூட் புகைப்படம்!
விஜயகுமார் குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். விஜயகுமாரின் முதல் மனைவி சினிமா பக்கம் தலை காட்டாதவர் என்றாலும், இவரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா ஒரு நடிகை ஆவார். அதே போல் விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகள்களில், கவிதா ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இரண்டாவது மகள் அனிதா டாக்டர் என்பதால் இவரும் நடிப்பில் இருந்து ஒதுக்கியே இருந்தார். இவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது...மஞ்சுளா தான் அனிதா படிப்பில் கவனம் செலுத்தட்டும் என கூறி அவரை படத்தில் நடிக்க வைக்க அனுமதிக்கவில்லை.
மேலும் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு பிறந்த வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி ஆகிய மூவருமே நடிகைகள் தான். அதே போல் விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய், தற்போது பல படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் அருண் விஜய், தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடினாலும் பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்தார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்த அருண் விஜய் நன்றியுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலானது.
'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!
தன்னுடைய அம்மா - அப்பா மீது அதீத அன்பு வைத்துள்ள அருண் விஜய், தன்னுடைய அப்பாவுக்கும் இரண்டு அம்மாக்களுக்கும் விஜயகுமாரின் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலையில் உள்ள பிரமாண்டமான வீட்டின் வாசலிலேயே சிலை வைத்து பெருமை படுத்தியுள்ளார். இப்போது இந்த சிலை தான் விஜயகுமார் வீட்டின் அடையாளமாகவே மாறி உள்ளது.
அருண் விஜய் தன்னுடைய பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்தாலும், பொங்கல் மற்றும் குடும்ப விசேஷங்கள் என்றால் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். விஜயகுமார் நிஜத்தில் ராஜா வாழ்க்கை வாழும் நிலையில், அவரின் மகன் சிலை வைத்து அவரை ஒரு மஹாராஜாவி போல் உணர வைத்துள்ளார்.
ஏற்கனவே விஜயகுமார் மறைந்த தன்னுடைய அப்பா அம்மாவுக்கு இந்த வீட்டு வாசலில் சிலை வைத்துள்ள நிலையில், அதன் அருகிலேயே தான் அருண் விஜய் இந்த சிலையை அமைத்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் சொந்த ஊருக்கு சென்று பாட்டி மற்றும் மறைந்த சித்தி மஞ்சுளாவுக்கு மாலை அணிவித்து வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் அருண் விஜய்.
ஏ.ஆர்.ரகுமான் உடனான விவாகரத்து முடிவு ஏன்? முதன்முறையாக மனம்திறந்த சாய்ரா பானு