100 கோடி வசூல் அள்ளிய லக்கி பாஸ்கர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

First Published | Nov 25, 2024, 2:44 PM IST

Lucky Baskhar OTT Release Date : துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.

Lucky Baskhar

மலையாள நடிகரான துல்கர் சல்மான், தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பேமஸ் ஆனார். இதையடுத்து பிறமொழி படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கிய துல்கருக்கு தெலுங்கில் சீதா ராமம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் மலையாள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பிறமொழிகளில் அதிகம் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் சீதா ராமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடித்த இரண்டாவது நேரடி தெலுங்கு படம் லக்கி பாஸ்கர்.

Lucky BaskharDulquer

லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர். லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் அக்டோபர் 31-ந் தேதி திரைக்கு வந்தது. தீபாவளிக்கு ரிலீசான படங்களில் அமரனுக்கு அடுத்தபடியாக அமோக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது லக்கி பாஸ்கர் தான்.

இதையும் படியுங்கள்... 2024-ல் ஓவர் பில்டப்போடு வெளியாகி அட்டர் பிளாப் ஆன தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

Lucky Baskhar Collection

தமிழில் முதலில் கம்மியான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆன இப்படம், பின்னர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிரதர் மற்றும் பிளெடி பெக்கர் ஆகிய படங்கள் டம்மியானதால் அதனை ஓவர்டேக் செய்து அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்து, தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி என்கிற இமாலய வசூலை வாரிக்குவித்தது.

Lucky Baskhar OTT Release

திரையரங்குகளில் மாஸ் ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் லக்கி பாஸ்கர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தியேட்டரை போல் ஓடிடியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தர லோக்கல் பாய்ஸ் ஆக மாறி; குத்தாட்டம் போட்ட தனுஷ் - சிவகார்த்திகேயன்!

Latest Videos

click me!