2024-ல் ஓவர் பில்டப்போடு வெளியாகி அட்டர் பிளாப் ஆன தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

First Published | Nov 25, 2024, 2:00 PM IST

Tamil Flop Movies in 2024 : 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

Flop Movies 2024

2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருந்தது. ஏனெனில் இந்த ஆண்டு ரஜினி, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன. அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் மலையாள படமொன்று தமிழ் நாட்டில் சக்கைப்போடு போட்டதும் இந்த ஆண்டு தான். இப்படி ஏற்ற இறக்கங்களுடன் சென்றுகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், இந்த ஆண்டு அதிக பில்டப்போடு ரிலீஸ் ஆகி பிளாப் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.

Lal Salaam

லால் சலாம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இதில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அவரது படமாகவே இது புரமோட் செய்யப்பட்டது. இதனால் படத்தின் மீதான ஹைப் எகிறியது. ஆனால் அவர்கள் கொடுத்த பில்டப் அளவுக்கு படம் இல்லாததால் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 40 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதில் பாதி கூட வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Indian 2

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம், தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக கருதப்படுகிறது. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். இந்தியன் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் அதே அளவுக்கு இருக்கும் என்கிற நினைப்போடு இந்தியன் 2 படம் பார்க்க சென்ற ரசிகர்களை கதறவிட்டார் கமல்ஹாசன் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படு கிரிஞ்சாக இருந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாகவும் அமைந்தது.

இதையும் படியுங்கள்... அதிக திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகை இவங்க தான் - யாருன்னு தெரியுதா?

Kanguva

கங்குவா

2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் அது கங்குவா தான். ஏனெனில் சுமார் 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இப்படம் பாகுபலி மாதிரி இருக்கும் என்றெல்லாம் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி படத்தின் ரிலீசுக்கு முன்னர் படம் நெருப்பு மாதிரி இருக்கும் என சூர்யா சொல்ல, படம் 2000 கோடி வசூலிக்கும் என ஞானவேல் ராஜா சொல்ல, இதையெல்லாம் கேட்டு பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன இப்படம் உப்பு சப்பு இல்லாத திரைக்கதையால் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதில் பாதி வசூலிப்பதே சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

Brother

பிரதர்

ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சைரன் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் முதலுக்கு மோசமின்றி தப்பித்தது. இதையடுத்து இந்த ஆண்டு தீபாவளிக்கு அவர் நடித்த பிரதர் படம் திரைக்கு வந்தது. ராஜேஷ் இயக்கிய இப்படம் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், இப்படம் ரிலீஸ் ஆன வேகத்திலேயே தியேட்டரை விட்டு காணாமல் போனது. பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... 'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!

Latest Videos

click me!