'கங்குவா' படத்தின் சோலி முடிஞ்சிது! நவம்பர் 29-ல் வெளியாகும் 9 புதிய படங்கள்!

First Published | Nov 25, 2024, 12:24 PM IST

November Tamil movie releases 2024: நெகடிவ் விமர்சனத்தை பெற்றாலும், ஒரு சில திரையரங்குகளில் தற்போது வரை காத்து வாங்கி வரும் கங்குவாவை மூன்றே வாரங்களில் வெளியேற்ற இந்த வாரம் தமிழில் மொத்தம் 9 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

November Tamil movie releases 2024

November Tamil movie releases 2024: சொர்க்க வாசல்:

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் 'சொர்க்க வாசல்'. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. பெரும்பாலும் ஜெயில் கான்செப்டில் வெளியாகும் படங்கள் கடந்த சில வருடங்களாகவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் இயக்குனரும் - நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். எனவே இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாக உள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், நட்டி, ஹக்கீம் ஷா, சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் 
நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

Miss You

November Tamil movie releases 2024: மிஸ் யூ:

நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர், முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் மிஸ் யூ, சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியன் 'சித்தா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து தனி ஹீரோவாக இவர் நடித்துள்ள 'மிஸ் யூ' திரைப்படத்தை ராஜசேகர் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கன் நடித்துள்ளார்.  தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு, ஜிப்ரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

பரமன்:

November Tamil movie releases 2024: விவசாயிகளின் கதையை திரையில் ஆழமாக பதித்துள்ள மற்றொரு படைப்பு 'பரமன்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக முண்டாசுப்பட்டி, ஜெய் பீம், போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் அர்ச்சனா, வையாபுரி, பழ கருப்பையா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'கால்ஸ்' படத்தை இயக்கிய இயக்குனர் சபரீஷ் இயக்கி தயாரித்துள்ளார். அழுத்தமான கதைகளத்தோடு உருவாக்கிய இந்த திரைப்படமும், நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சாதுவன்:

November Tamil movie releases 2024: குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் விஸ்வா கதாநாயகனாக நடித்துள்ள 'சாதுவன்' திரைப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாகி வரும் 29-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தை சந்தோஷ் சேகரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக நடிகை ரஷ்மிதா என்பவர் நடிக்க, கலையரசன், காசி சக்திவேல், இளங்கோ, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிவி கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை என்பதை அழுத்தமாக பேச உள்ள இந்த படம், ஒரே இரவில் நடக்கும் ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்க வருகிறது. கடந்த சில வருடங்களாகவே சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த படமும் அந்த லிஸ்டில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டப்பாங்குத்து:

November Tamil movie releases 2024: கிராமிய கலைகளின் ஒட்டுமொத்த களஞ்சியமாக, ஆட்டம் - பாடத்தோடு வெளியாக உள்ள இந்த திரைப்படம் படம் தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சி எனலாம், கதாநாயகனாக சங்கர பாண்டி நடிக்க, தீப்தி ராஜ், காதல் சுகுமார், ஆண்ட்ரிவ், துர்கா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணன் இசையமைத்துள்ள இந்த படத்தில், பல கிராமிய கலைஞர்கள் மற்றும் கானா பாடகர்கள் பாடியுள்ளனர்.

இதுவரை தமிழ் திரை உலகில் வெளிவராத ஒரு புதிய முயற்சியாக, இந்த திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் கடந்தாண்டு வெளியான நிலையில் ஒரு வழியாக இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
 

அந்த நாள்:

November Tamil movie releases 2024: கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட 'அந்த நாள்' திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கதிரேசன் என்பவர் இயக்க, கிரீன் மேஜிக் என்டர்டைன்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரித்துள்ளார். ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆதியா பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். பிளாக் மேஜிக் மற்றும் கிரைம் தில்லராக வெளியாக உள்ள இந்த படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்ய, ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார்.

மாயன்:

November Tamil movie releases 2024: இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் மாயன். 
இந்த திரைப்படம் இந்திய புராணங்களில் இடம்பெற்றுள்ள மாயன் பழங்குடியினரை பற்றியும், இந்த உலகின் பேரழி குறித்து  எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாயன் திரைப்படம், மனிதனின் தோற்றம் மற்றும் அழிவு குறித்து கூற வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரும்பிப்பார்:

November Tamil movie releases 2024: இயக்குனர் இப்ராஹிம் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் 'திரும்பிப்பா'. வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், ராஜ்குமார், பிக் பாஸ் டானி, உள்ளிட்டா பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை பவித்யா லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில், கிரிதரன் என்பவர் தயாரித்துள்ளார். ஷேடோ வாக் என்கிற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் திரைப்படமான இந்த படம், நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள சைலன்ட் என்கிற மற்றொரு திரைப்படமும் நவம்பர் 29ஆம் தேதியை குறிவைத்து ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!