இதுக்குமேல மூடி மறைக்க முடியாது; என்னோட லவ்வர் இவர்தான் - ராஷ்மிகா ஓபன் டாக்!

First Published | Nov 25, 2024, 11:20 AM IST

Rashmika Mandanna Reveals her Lover : புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக பேசி இருக்கிறார் ராஷ்மிகா.

Rashmika Mandanna

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்த படம் புஷ்பா. இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய புஷ்பா திரைப்படம் விருதுகளையும் வென்று குவித்தது. குறிப்பாக இப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. தெலுங்கு திரையுலகில் தேசிய விருது வாங்கிய முதல் ஹீரோ இவர் தான்.

Sreeleela

புஷ்பா படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தை விட மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அப்படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்யும் பணியில் படக்குழு செம்ம பிசியாக உள்ளது. அந்த வகையில் நேற்று புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... 2.5 மணி நேரம் மேக்கப்: புஷ்பா 2 மூவில லேடி கெட்டப் போட்டதால முதுகு வலியே வந்துருச்சு; அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!

Tap to resize

Pushpa 2 Pre Release Event

இதில் புஷ்பா 2 படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் கலந்துகொண்டார். இந்த விழாவில் புஷ்பா 2 படத்தின் கிஸ்ஸிக் என்கிற பாடல் வெளியிடப்பட்டது. இதில் தான் நடிகை ஸ்ரீலீலா, ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்தப் பாடல் வீடியோ பார்த்த ரசிகர்கள் ஸ்ரீலீலாவின் அழகில் மயங்கிப் போய் உள்ளனர்.

Rashmika, Allu Arjun, Sreeleela

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய புஷ்பா 2 படத்தின் நாயகியிடம் உங்களின் வருங்கால கணவர் யார்... அவர் திரைத்துறையை சேர்ந்தவரா என தொகுப்பாளினி அஞ்சனா கேட்க, இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்த ராஷ்மிகா, இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் என சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போயினர்.

Rashmika Says about her Lover

ஏனெனில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலிப்பதாக பல ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டாலும், இதுவரை எந்த மேடையிலும் அதுபற்றி வாயைத்திறக்காத ராஷ்மிகா, தற்போது முதன்முறையாக சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 பட விழாவில் அதுபற்றி பேசி இருப்பது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே கங்குவாவின் வசூலை தாண்டிய புஷ்பா 2 - மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!

Latest Videos

click me!