
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக வலம் வருபவர் இர்பான். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தன் யூடியூப் சேனலை தொடங்கினார். ஆரம்பத்தின் சினிமா படங்களை விமர்சனம் செய்து பதிவிட்டு வந்த இவர், பின்னர் படிப்படியாக ஃபுட் விலாகராக மாறினார். முதலில் தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள பேமஸ் ஆன உணவகங்களில் உணவை சுவைத்து அதனை ரிவ்யூ செய்துவந்தார் இர்பான். இது படிப்படியாக மக்கள் மத்தியில் ரீச் ஆகத் தொடங்கியது.
சுமார் 10 வருட உழைப்புக்கு பின் யூடியூப்பில் அவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தனர். இதையடுத்து உலகளவில் சுற்றுலா சென்று அங்குள்ள உணவுகளை ரிவ்யூ செய்ய முடிவெடுத்து தாய்லாந்து, துருக்கி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து அதை வீடியோவாக வெளியிட்டார். குறிப்பாக பாம்பு, முதலை என இவர் ருசிக்காத உணவுகளே இல்லை என சொல்லலாம்.
இது மக்கள் மத்தியில் ரீச் ஆனதால் ஒரே ஆண்டில் மேலும் 9 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப்பில் கோல்டன் பிளே பட்டன் பெற்றார். தற்போது அவரது யூடியூப் சேனலை பின் தொடர்வோர் எண்ணிக்கை 46 லட்சத்தை தாண்டி உள்ளது. இதே யூடியூப் மூலம் இர்பான் சந்தித்த சர்ச்சைகளும் ஏராளம். குறிப்பாக இவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா.. பெண்ணா என்பதை கண்டறிய துபாய் சென்று அங்கு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தொடங்கி அண்மையில் குழந்தை பிறந்த போது பிரசவ வார்டுக்குள் கேமரா உடன் சென்று அங்கு குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதை வீடியோ எடுத்தது வரை எக்கச்சக்கமான சரச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஹாப்பியாக எலிமினேட் ஆன வர்ஷினிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக் பாஸ்!
இர்பானுக்கு கடந்த 2022-ம் ஆண்டே திருமணம் நிச்சயமாகி பின்னர் சில காரணங்களால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த ஆசிஃபா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் இர்பான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. யூடியூபில் பேமஸ் ஆனதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய இர்பான், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி தன் சமையல் திறமையை வெளிப்படுத்திய இர்ஃபான் அதில் பைனல் வரை முன்னேறி அசத்தினார். யூடியூப் மூலம் இர்ஃபானுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு வீடியோவுக்கு அவர் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
தினசரி தவறாமல் வீடியோ போடும் இர்பானின் மாத வருமானம் 15 முதல் 20 லட்சம் இருக்குமாம். யூடியூப்பில் வீடியோ போட்டே கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள இர்பானின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் யூடியூப்பில் சம்பாதித்த பணத்தின் மூலம் சென்னையில் ஆடம்பர வீடு ஒன்றையும் கட்டி இருக்கிறார். அதன் மதிப்பும் கோடிக்கணக்கில் இருக்கும். இதுதவிர பென்ஸ், பிஎம்டபிள்யூ., ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு கார்களும் இர்பானிடம் உள்ளது.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா?