MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹாப்பியாக எலிமினேட் ஆன வர்ஷினிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக் பாஸ்!

ஹாப்பியாக எலிமினேட் ஆன வர்ஷினிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக் பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த மூன்று வாரங்களிலேயே எலிமினேட் ஆன வர்ஷினி வெங்கட்டின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 25 2024, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Varshini Venkat Eliminated

Varshini Venkat Eliminated

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்னர் நடைபெற்ற 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதையடுத்து ஒரு மாதம் முடிவில் மேலும் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் சென்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆண்கள், பெண்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த போட்டி சுவாரஸ்யமாக இல்லை என்கிற விமர்சனம் தான் தொடர்ந்து எழுந்து வந்தது. இதனால் அதிரடி முடிவெடுத்துள்ள பிக் பாஸ் 50வது நாளான நேற்று இரண்டு அணிகளுக்கு இடையே இருந்த கோடு எடுக்கப்பட்டு, இனி ஒரே அணியாக விளையாட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன சாச்சனா; பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவரா?

34
Bigg Boss Tamil season 8 contestants

Bigg Boss Tamil season 8 contestants

பிக் பாஸின் இந்த பிளானாவது ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் 13 போட்டியாளர்கள் சிக்கி இருந்தனர். இதில் சிவக்குமார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று எஸ்கேப் ஆனதால் எஞ்சியுள்ள 12 பேரில் யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற வர்ஷினி வெங்கட் எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.

44
Varshini Venkat Salary

Varshini Venkat Salary

வழக்கமாக போட்டியாளர்கள் எலிமினேட் ஆனால் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால் வர்ஷினி சிரித்த முகத்தோடு வெளியே சென்றார். விஜய் சேதுபதியிடம் பேசும்போதும் மூன்று வாரம் இருந்ததே தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாக கூறினார். பிக் பாஸ் வரலாற்றில் இப்படி சிரித்த முகத்தோடு எலிமினேட் ஆன போட்டியாளர் யாரும் இல்லை என விஜய் சேதுபதியே வியந்து பாராடினார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக வர்ஷினி வெங்கட் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. அதன்படி அவர் மொத்தம் 21 நாட்கள் இந்நிகழ்ச்சியில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளாராம். 

இதையும் படியுங்கள்... தந்தையால் வீட்டைவிட்டே விரட்டிவிடப்பட்ட விஜய் பட நடிகை தான் இவங்க; யாரென்று தெரிகிறதா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved