குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா?

First Published | Nov 25, 2024, 7:38 AM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Good Bad Ugly

நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா 2 என்கிற பான் இந்தியா படத்தையும் தயாரித்து உள்ளது.

Ajith

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளதாம். இதை முடித்ததும் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்கி, படத்தை வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்! கங்குவா தான் காரணமா?

Tap to resize

Devi sri prasad

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரை கமிட் செய்து உள்ளார்களாம். அந்த வகையில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அனிருத் ஏற்கனவே கைவசம் எக்கச்சக்கமான படங்களை வைத்திருப்பதால் அவர் நோ சொல்லிவிட்டார். இதனால் தற்போது ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளார்களாம்.

GV Prakash, Anirudh

குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னர் இயக்கிய மார்க் ஆண்டனி என்கிற மாஸ் ஹிட் படத்திற்கு ஜிவி தான் இசையமைத்து இருந்தார். அதுமட்டுமின்றி ஆதிக்கின் நெருங்கிய நண்பர் என்பதால் இதில் இசையமைக்க ஓகே சொல்லி உள்ளார் ஜிவி. இதன்மூலம் நடிகர் அஜித்துடன் 17ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதற்கு முன்னர் கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த கிரீடம் படத்துக்கு இசையமைத்து இருந்தார் ஜிவி பிரகாஷ்.

இதையும் படியுங்கள்... ஆஹா OTTயில் அசத்தும் சார்லியின் Line Man - வாழ்த்தி பாடல் பாடிய அந்தோணி தாசன்!

Latest Videos

click me!