Mohan G
கடந்த வாரம் பிரபல நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையான வகையில் பேசியதை அடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஏழு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்ய சென்ற பொழுது, போயஸ் கார்டனில் இருக்கும் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், இந்திய அளவில் அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாதில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். சென்னை அழைத்து வரப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் உடனான விவாகரத்து முடிவு ஏன்? முதன்முறையாக மனம்திறந்த சாய்ரா பானு
Isaivani
இன்னும் அந்த விஷயமே அடங்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கானா இசை பாடகியும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாடகியுமான இசைவாணி சபரிமலை ஐயப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல்களை பாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரபல இயக்குனர் ரஞ்சித் தலைமையில் சில ஆண்டுகளுக்கு முன்பு "கேஸ்ட்லெஸ் கலெக்ஷன்ஸ்" என்கின்ற இசை குழு ஆரம்பிக்கப்பட்டது. இதில் தான் ஒரு முக்கிய பாடகியாக இசைவாணி திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Singer Isaivani
கடந்த சில ஆண்டுகளாகவே ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் "ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ள வந்தால் என்ன தப்பா" என்று தொடங்கும் பாடல் பெரிய அளவில் வைரலாக தொடங்கியது. ஆனால் இந்த பாடல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரஞ்சித்தின் "கேஸ்ட்லெஸ் கலெக்ஷன்ஸ்" இசைக்கச்சேரியில் இசைவாணி பாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த பாடலை அவர் பாடிய பொழுது கழுத்தில் சிலுவை அணிந்திருந்த காரணத்தினால் அது மத பிரச்சினையாக தற்பொழுது மாறியுள்ளது. அவர் எப்படி இந்த பாடலை சிலுவை அணிந்து பாடலாம் என்று கூறி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Mohan G Statement
தொடர்ச்சியாக பாடகி இசைவாணிக்கு மிரட்டல்களும் அலைபேசி மூலம் வருவதாக அவரே ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் பிரபல இயக்குனர் மோகன் ஜி இந்த விஷயத்தில் தனது கருத்தை கூறி இருக்கிறார். அவர் வெளியிட்ட ஒரு எக்ஸ் தல பதிவில், "ஐயப்பனுக்கு ஆண் பத்திரங்களை விட பெண் பக்தர்கள் தான் அதிகம். இது புரியாமல் இயேசுவை ஒரு பக்கம் ஆதரிப்பது, மற்றொருபுறம் ஐயப்பனை நாடி அவருடைய கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் நம்பிக்கையை கேவலப்படுத்துவது. இப்படி மதப் பிரிவினையை தூண்டுவது ஏன்? உடனடியாக மக்கள் இசை பாடகி இசைவாணியை கைது செய்ய வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
கல்யாணத்துக்கு முன் கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் கோலிவுட்