ஏ.ஆர்.ரகுமான் உடனான விவாகரத்து முடிவு ஏன்? முதன்முறையாக மனம்திறந்த சாய்ரா பானு

Published : Nov 24, 2024, 03:25 PM ISTUpdated : Nov 24, 2024, 03:26 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்து பிரிவதற்கான காரணத்தை முதன்முறையாக கூறி இருக்கிறார் சாய்ரா பானு.

PREV
14
ஏ.ஆர்.ரகுமான் உடனான விவாகரத்து முடிவு ஏன்? முதன்முறையாக மனம்திறந்த சாய்ரா பானு
AR Rahman, Saira Banu

ஏ.ஆர்.ரகுமானும் சாய்ரா பானுவும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த கோடிக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும், அமீன் என்கிற மகனும் உள்ளனர். ரகுமான் உடன் 29 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக கடந்த வாரம் சாய்ரா பானு வழக்கறிஞர் வாயிலாக அறிவித்திருந்தார். இவர்களின் இந்த விவாகரத்து செய்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

24
AR Rahman wife Saira Banu

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவித்த அடுத்த ஒரு மணிநேரத்திலேயே அவரிடம் பணியாற்றி வரும் இசைக்கலைஞரான மோகினி டே என்பவரும் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இருவரையும் தொடர்புபடுத்தி சில செய்திகள் வெளியாகின. இதனால் டென்ஷன் ஆன ஏ.ஆர்.ரகுமான், தன்னைப்பற்றிய அவதூறு கருத்துக்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... விவாகரத்து குறித்து வீண் வதந்தி; 24 மணிநேரம் கெடு வைத்த ஏ.ஆர்.ரகுமான் - YouTubersக்கு செக்!

34
AR Rahman, Saira Banu Divorce

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா முதன்முறையாக விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசி உள்ளது. அதன்படி அவர் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். கடந்த இரண்டு மாதங்களாவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் சாய்ரா மும்பையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். தன் உடல்நிலை காரணமாகவே தான் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்து பிரிவதாக அவர் அந்த ஆடியோவில் கூறி இருக்கிறார்.

44
Saira Banu about AR Rahman

மேலும் ஏ.ஆர்.ரகுமான் அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ள அவர், அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன், எங்களது விவாகரத்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவர் வைரம் போன்ற மனிதர் என்று தன்னுடைய கணவரை புகழ்ந்து சாய்ரா பானு பேசி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவருடன் சேருமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர் ரஹ்மான் ஏன் தனது பெயரை மாற்றினார்? இப்படி ஒரு காரணம் இருக்கா?

Read more Photos on
click me!

Recommended Stories