புதுப்பேட்டை 2 கதை இதுதான்; ஆனா ஒரு சிக்கல் இருக்கு; செல்வராகவன் ஓபன் டாக்!

First Published | Nov 24, 2024, 2:26 PM IST

Selvaraghavan Revealed Pudhupettai 2 Story : புதுப்பேட்டை 2 படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பேசிய தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

Selvaraghavan Revealed Pudhupettai 2 Story

Selvaraghavan Revealed Pudhupettai 2 Story : காதல் கொண்டேன் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் செல்வராகவன். அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து மட்டும் 4 படங்களை இயக்கினார். இதில் புதுப்பேட்டை வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Pudhupettai 2 Story

இதே போன்று தான் ஆயிரத்தில் ஒருவன் படமும். தற்போது இந்த இரு படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால், எப்போது எடுக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இப்போது அதைப் பற்றி அவரே கூறியிருக்கிறார். புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் கண்டிப்பாக வரும். ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவென்றால் ஒரு வருடத்திற்கு எல்லோரையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்.

Tap to resize

Pudhupettai Movie, Dhanush

அப்படி இல்லை என்றால் படத்திற்கான கதையை மாற்ற வேண்டும். ஏற்கனவே புதுப்பேட்டை 2 படத்திற்கான கதை 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. இந்தப் படமான முற்றிலும் மகனைப் பற்றிய படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பேட்டை படத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

Pudhupettai 2 Movie, Dhanush and Selvaraghavan

மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பது சற்று கடினமான ஒன்று தான். அவர்களது கால்ஷீட் கிடைக்க வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும். இப்படி பல சிக்கல்கள் இருக்கிறது. ஆதலால், இப்போதைக்கு புதுப்பேட்டை 2 படம் உருவாக வாய்ப்பில்ல்லை என்று தெரிகிறது. அதே போன்று தான் ஆயிர்த்தில் ஒருவன் 2 படமும்.

Selvaraghavan Revealed Pudhupettai 2 Story

செல்வராகன் ஒரு இயக்குநராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் சினிமாவில் நடித்து வருகிறார். பீஸ்ட், நானே வருவேன், மார்க் ஆண்டனி, ராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் என்ற படத்திலு நடித்துள்ளார். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடராஜன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

Pudhupettai 3, Sorgavaasal

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு ஹீரோயின் கூட நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறைச்சாலையை சுற்றிலும் இந்த படம் நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவனின் நடிப்பை பேசும் படமாக இருக்கும் என்று தெரிகிறது. சொர்க்கவாசல் படம் வரும் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Latest Videos

click me!