கல்யாணத்துக்கு முன் கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் கோலிவுட்

First Published | Nov 24, 2024, 2:54 PM IST

தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானதும் திடீரென தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் என்றாலே `மகாநடி` தான் நினைவுக்கு வரும். மகாநடி படத்தில் சாவித்ரியாக அவர் திரையில் செய்த மாயாஜாலம் அப்படிப்பட்டது. இந்த தலைமுறைக்கு சாவித்ரி என்றாலே கீர்த்தி சுரேஷ் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு தனது நடிப்பால் மயக்கிய கீர்த்தி சுரேஷுக்கு அந்த படத்திற்கு பிறகு சரியான வெற்றி கிடைக்கவில்லை. ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் மட்டுமின்றி வணிக ரீதியான படங்களில் நடித்தும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த மாமன்னன் படம் மட்டுமே வெற்றிபெற்றது. 

Actress keerthy suresh

ஹீரோயினை மையப்படுத்தி அவர் நடித்த ரகு தாத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அங்கு தனது மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தோற்றத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் `பேபி ஜான்` என்ற படத்தில் நடிக்கிறார். வருண் தவான் இதில் நாயகனாக நடிக்க, கலீஸ் இப்படத்தை இயக்குகிறார். அதிரடி திரில்லராக உருவாகும் இந்த படம், விஜய் நடித்த `தெறி` படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் பாலிவுட் பாணியில் மாற்றங்கள் செய்துள்ளனர். இந்த படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தியில் கதாநாயகிகள் கவர்ச்சி காட்டுவது வழக்கம். இப்போது கீர்த்தி சுரேஷ் விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது.

Tap to resize

Keerthy Suresh Baby John Movie

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியானது. `நைனா மட்டக்கா` என்ற பாடல் இப்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது. இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதற்கு காரணம் கீர்த்தி சுரேஷின் தோற்றம் தான். ஏனெனில் அவர் இதில் தோன்றும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளார்கள். பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு கீர்த்தி கிளாமராக தோன்றியுள்ளார்.

இத்தனை நாட்கள் தென்னிந்திய மொழிகளில் நடித்தவரை தான் ஒரு ஹோம்லி நடிகை என்கிற பிம்பத்தை உருவாக்கினார். ஆனால்  பாலிவுட்டுக்கு சென்றதும் கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார். பாலிவுட் சென்றதும் கவர்ச்சிக்கு தாவிவிட்டாரே என அவரது புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரஜினி பிறந்தநாளன்று திருமணம்; 15 வருஷமா கீர்த்தி சுரேஷ் உருகி உருகி காதலிச்சவரின் போட்டோ லீக்கானது

Baby John Movie Song

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. கதாநாயகிகள் நீண்ட காலம் நிலைக்க, பான் இந்தியா அளவில் பிரபலமாக, இதுபோன்ற கவர்ச்சி காட்டுவது சகஜம். குறிப்பாக பாலிவுட்டில் ஜொலிக்க கவர்ச்சி அவசியம். கீர்த்தி சுரேஷும் அந்த லிஸ்டில் இணைந்துவிட்டார். வணிக ரீதியான கதாநாயகியாக தன்னை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். படம் வெற்றி பெற்றால் இந்த விமர்சனங்கள் மறைந்துவிடும்,

keerthy suresh New Avatar

இல்லையெனில் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அதற்கு முன்பு ரஷ்மிகா மந்தனாவும் டோலிவுட்டில் சற்று அடக்கமாகவே தோன்றினார். பாலிவுட் சென்ற பிறகு கவர்ச்சியில் புகுந்து விளையாடினார். இப்போது ரஷ்மிகாவையே கீர்த்தி சுரேஷ் பின்பற்றுவதாகத் தெரிகிறது. ஆனால் ரஷ்மிகா அங்கு வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு இது சாதாரணமாகிவிட்டது. கீர்த்தி சுரேஷ் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். `பேபி ஜான்` படம் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள்... கோடிகளில் சம்பளம்; கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Latest Videos

click me!