பத்து இல்ல; இருபது இல்ல; ஒரே ஆண்டில் 50 படங்கள் - சாதனை படைத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

Kollywood Actor : தமிழ் சினிமாவை பொறுத்தவரை கொடிகட்டி பரந்த நடிகர் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் வெகு சில கலைஞர்கள் தான் தவிர்க்கமுடியாத கலைஞர்களாக மாறிவிடுகின்றனர். 

Comedy Actors

தமிழ் திரையுலகை பொருத்தவரை நூறு ஆண்டு பழமையான ஒரு திரைத்துறை என்ற பெருமை எப்போதும் நமக்கு உண்டு. உண்மையில் அந்த பெருமைக்கு காரணம், இந்த திரை துறையில் பயணித்த, மற்றும் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஜாம்பவான்களே என்றால் அது சற்றும் மிகையல்ல. தமிழ் திரை உலகை பொறுத்தவரை, பல்வேறு நடிகர் நடிகைகள் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருந்தார்கள், இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அதில் வெகு சிலரே தவிர்க்க முடியாத நடிகர்களாக, நடிகைகளாக மாறிவிடுகின்றனர். தவிர்க்க முடியாத என்று இங்கு குறிப்பிடுவது, ஒரு படத்தை இயக்கும்போது "இவர் இல்லாமல் எப்படி" என்று இயக்குனர்களும் சக நடிகர்களும் யோசிக்கும் அந்த ஒரு நிலையை தான். அந்த வகையில் 1980ம் ஆண்டு, ஒரு நடிகர் நடிப்பில் மட்டும் 50 திரைப்படங்கள் தமிழில் வெளியாகிய சாதனை படைத்திருக்கிறது. இப்போது வரை அந்த சாதனையை உலக அளவில் யாரேனும் முறியடித்திருக்கிறார்களா? என்று கேட்டால் அது சந்தேகத்திற்குரிய கேள்வியே.

இசைவாணியை உடனே கைது செய்யணும்; இயக்குனர் மோகன் ஜி ஆவேசம்!

Suruli Rajan

இந்த சாதனைக்கு உரித்தானவர் தான் கடந்த 1938ம் ஆண்டு பெரிய குளத்தில் பிறந்து, தனது 42 ஆவது வயதிலேயே மறைந்த மெகா ஹிட் நடிகர் சுருளிராஜன். விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுருளி ராஜன், கடந்த 1965ம் ஆண்டு தமிழில் வெளியான இயக்குனர் ஜோசப் தாலியத் இயக்கத்தில் வெளியான "இரவும் பகலும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவருடைய இயல்பான உடல்மொழியும், வித்தியாசமான பேச்சும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகு சீக்கிரம் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வைத்தது. 

இவர் திரைத்துறையில் அறிமுகமான 10 ஆண்டுகளில் மிகப்பெரிய நடிகராக மாறினார். 1976 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் 15க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. தொடர்ச்சியாக இயக்குனர்கள் சுருளிராஜனை தங்களுடைய படத்தில் புக் செய்ய தொடங்கினர். காமெடியோ, வில்லத்தனமோ அல்லது குணச்சித்திர வேடமோ, எது கொடுத்தாலும் அதில் திறன் பட தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் இவர். 


Actor Suruli Rajan

மறைந்த சின்ன கலைவாணர் விவேக், பல திரைப்படங்களில் நடிகர் சுருளிராஜனை போல வசனங்களை பேசி அசத்தியிருப்பார். காரணம் அப்படி ஒரு ஆழமான அபிப்பிராயத்தை பிற கலைஞர்களிடமும் பதித்தவர் சுருளிராஜன் என்றால் அது மிகையல்ல. எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி கமல் வரை பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல சிறப்பான படங்களில் நடித்து அசத்திய சுருளி ராஜன், ஜெய்சங்கரோடு அதிக நட்புறவோடு இருந்து வந்திருக்கிறார். கடந்த 1980 ஆம் ஆண்டு "அன்புக்கு நான் அடிமை", "தூரத்தில் இடி முழக்கம்", "எல்லாம் உன் கைராசி", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜானி" மற்றும் "காளி" தொடங்கி, "தெருவிளக்கு", "உல்லாச பறவைகள்", "வண்டிச்சக்கரம்" மற்றும் "வேலி தாண்டிய வெள்ளாடு" என்று அந்த ஒரே ஒரு ஆண்டில் மட்டும் சுருளிராஜனின் நடிப்பில் 50 திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.

Suruli Rajan Movies

கடந்த 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சுருளிராஜன் இறந்துவிட்டார் என்றாலும் கூட, அவருடைய நடிப்பில் உருவான திரைப்படங்கள் 1985 ஆம் ஆண்டு வரை வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் வி.சி குகநாதன் இயக்கத்தில் வெளியான "ஏமாறாதே ஏமாறாதே" என்கின்ற திரைப்படம் தான் அவருடைய நடிப்பில் வெளியான இறுதி திரைப்படம். 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு மட்டுமே சுருளிராஜன் நடிப்பில் கிட்டத்தட்ட 35 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் உடனான விவாகரத்து முடிவு ஏன்? முதன்முறையாக மனம்திறந்த சாய்ரா பானு

Latest Videos

click me!